ஒடிசா திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒடிசா திரைப்படத்துறை என்பது இந்தியத் திரைப்படத்துறையில் ஒடியா மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். இது ஒடிசா என்ற மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவருகின்றது. இத் திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் விதமாக 1974 ஆம் ஆண்டில் ஒடிசா அரசு திரைப்படத் தயாரிப்பையும் திரைப்பட அரங்குகளையும் நிர்மாணிப்பதை மாநிலத்தில் ஒரு தொழிலாக அறிவித்தது.[1]

வரலாறு[தொகு]

முதல் ஒடியா மொழி திரைப்படம் இந்திய காவியமான இராமாயணத்திலிருந்து சீதை மற்றும் ராமரின் திருமணத்தைப் பற்றிய கதையை கொண்ட 'சீதா பிபாஹா' என்ற திரைப்படம் ஆகும். இந் திரைப்படம் 1936 ஆம் ஆண்டு 'மோகன் சுந்தர் தேப் கோஸ்வாமி' என்பவரால் தயாரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]