உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாபித் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்பாலிவுட் (இந்தியா)[1][2]
லூதியானாவின் சில்வர் ஆர்க் பல்வணிகங்காடியில் உள்ள பிவிஆர் திரையரங்கம்
திரைகளின் எண்ணிக்கைஇந்தியாவின் பஞ்சாப், தில்லி, அரியானா மாநிலங்களில் 400+ ஒற்றைத்-திரைகள்.
முதன்மை வழங்குநர்கள்ஸ்பீடு ரெகார்ட்சு
இசுட்டூடியோ 7 தயாரிப்பபு
வைட் இல் தயாரிப்பு
மாண் பிலிம்சு
குர்பெடா பிலிம்சு/சிப்பி கிரிவால் தயாரிப்பு
பேசிக் பிரதர்சு தயாரிப்பு
சூரியா சினிமாசு
தக்‌ஷ் அஜித் சிங்
விஸ்டம் இட்ரீ பிக்சர்சு ப.லிட்
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2014)[3][4]
மொத்தம்50
நிகர நுழைவு வருமானம் (2014)
மொத்தம்500 கோடி[5]
தேசியத் திரைப்படங்கள்இந்தியா: 450 கோடி[6]

பஞ்சாபித் திரைப்படங்கள் (Punjabi cinema, பஞ்சாபி மொழி: ਪੰਜਾਬੀ ਸਿਨੇਮਾ), பொதுவழக்கில் இப்பாலிவுட் (Pollywood)[7][8][9][10] இந்தியா, மற்றும் பாக்கித்தானில் உள்ள பஞ்சாப் மாநிலங்களில் உள்ள பஞ்சாபி மொழித் திரைப்படத் துறை ஆகும். இருபதாம் நூற்றாண்டில் பஞ்சாபித் திரைப்படத்துறையில் பாக்கித்தானிய பஞ்சாபித் திரைப்படத்துறையின் தாக்கம் இருந்தபோதிலும் தற்கால 21ஆவது நூற்றாண்டில் இந்தியப் பகுதியிலுள்ள பஞ்சாபில் இத்துறை வலுவான நிலையில் உள்ளது.

முதல் பஞ்சாபித் திரைப்படம் கல்கத்தாவில் (தற்போது கொல்கத்தா) தயாரிக்கப்பட்டு பிரித்தானிய பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் இலாகூரில் வெளியானது. இலாகூரில் உள்ளத் திரைப்படத்துறை இலாகூர், ஆலிவுட் இரண்டையும் இணைத்து லாலிவுட் எனப்படுகின்றது.

2009 வரை பஞ்சாபித் திரைப்படத்துறை 900க்கும் 1,000க்கும் இடையிலானத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.[11] 1970களில் ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒன்பது திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வந்தன. 1980களில் இது எட்டாகவும் 1990களில் இது ஆறாகவும் குறைந்தது. 1995இல் வெளியானத் திரைப்படங்கள் 11 ஆகும். ஆனால் 1996இல் இது ஏழாகக் குறைந்து 1997இல் ஐந்தானது. 2000களில் இது வளரத்தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் கூடுதலான திரைப்படங்கள் வெளியாகின்றன; பெரிய செலவிலானத் திரைப்படங்கள், பஞ்சாபி நடிகர்கள் (எதிர் பிற மாநில நடிகர்கள்), மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த இந்தித் திரைப்பட நடிகர்கள் என பல கட்டங்களை எட்டியுள்ளது.

முதல் திரைப்படம்

[தொகு]

1935-ஆம் ஆண்டு, கே.டி.மேகரா என்பவரே ஷீலா எனும் முதல் பஞ்சாபி திரைப்படத்தை உருவாக்கினார்.[12] இந்த படத்தில் தான் நூர் ஜஹான் எனும் நடிகை அறிமுகப்படுத்தப்பட்டார். கொல்கொத்தா நகரில் படமாக்கப்பட்ட இப்படம், லாகூர் நகரில் திரையிடப்பட்டது.[13] இத்திரைப்படம் அந்த மாகாணத்தில் பெரும் வெற்றியை கண்டது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பல தயாரிப்பாளர்களுக்கு, பஞ்சாபி திரைப்படங்களை வெளியிட ஆர்வம் கூடியது.[14] 1938-ஆம் ஆண்டு, பில்லூ மேகரா என்பவற்றின் உதவியுடன், ஹீர் சியால் எனும் தனது இரண்டாவது திரைப்படத்தை கே.டி.மேகரா வெளியிட்டார். நூர்ஜஹான் மற்றும் புதிய நடிகர்களான இஸ்மாயில் மற்றும் பாலோ இப்படத்தில் நடித்தனர். இந்த படம் வணிகரீதியில் வெற்றி அடைந்தது.[15]

பஞ்சாபி மொழி பேசும் சமூகம், லாகூர் மற்றும் பஞ்சாபில் மிகுதியாக இருந்ததனால், அங்கே பஞ்சாபி திரைப்படங்கள் அதிகம் வெளியிடப்பட்டன. லாகூரில் திரைப்பட ஸ்டுடியோக்கள் நிறுவப்பட்டன. மேலும், பல திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், மும்பை மற்றும் கொல்கத்தாவில் இருந்து லாகூருக்கு புலம்பெயர்ந்தனர். சாந்தா அப்தே, மோதிலால், சந்திரமோகன், ஹிராலால், நூர் ஜஹான், மும்தாஜ் சாந்தி, வாலி, சைய்யது அத்தாவுல்லா ஷா ஹாஷ்மி, கிருஷ்ண குமார் மற்றும் ஷங்கர் ஹுசைன் போன்ற திரைப்பட நட்சத்திரங்கள் லாகூருக்கு சென்றனர். பின்னாட்களில் இயக்குனராக விளங்கிய பல்தேவ் ராஜ் சோப்ரா என்பவர், லாகூரில் தான் சினி ஹெரால்ட்டு எனும் திரைப்பட செய்தி இதழை நடத்தி வந்தார். ராமானந்த சாகர் ஈவினிங் நியூஸ் எனும் திரைப்பட இதழில் பணிபுரிந்து வந்தார். அடகர் எனும் திரைப்பட செய்தித்தாளுக்கு சைய்யது அத்தாவுல்லா ஷா ஹாஷ்மி பணிபுரிந்து கொண்டிருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The first of its kind telephone directory of the Punjabi film and music industry launched by Member of Parliament (MP) Kirron Kher" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304224148/http://indianewscalling.com/tourism-lifestyle/news/17932-telephone-directory-of-the-punjabi-film-and-music-industry-launched-by-member-of-parliament-mp-ki.aspx. 
  2. "Pollywood Directory has the contact and other details of those related to Punjabi film industry. It is an initiative to organise Punjabi Cinema.". http://www.indiatvnews.com/entertainment/bollywood/kirron-kher-trying-to-get-film-city-in-chandigarh-16615.html. 
  3. "Currently, industry estimates peg the volume output of the industry at 50 films a year, with an estimated box office turnover in the range of Rs 400 to 450 crore.". http://www.business-standard.com/article/current-affairs/harry-baweja-s-chaar-saahibzaade-rakes-in-rs-70-crore-globally-115010800141_1.html. 
  4. "industry which used to release barely six films till 2002 is gearing up to churn out 120 this year". http://www.business-standard.com/article/beyond-business/jatt-di-film-113062101038_1.html. 
  5. "500cr punjabi industry". http://businesstoday.intoday.in/story/the-coming-of-age-of-punjabi-cinema/1/205030.html. 
  6. "estimated box office turnover in the range of Rs 400 to 450 crore.". http://www.business-standard.com/article/current-affairs/harry-baweja-s-chaar-saahibzaade-rakes-in-rs-70-crore-globally-115010800141_1.html. 
  7. "Pollywood the word for punjabi cinema". http://timesofindia.indiatimes.com/entertainment/punjabi/movies/news/Punjabi-actresses-are-turning-back-to-Pollywood/articleshow/14052346.cms. 
  8. "Pollywood directory will furnish contact details of over 1500 eminent personalities and also struggling new comers in the Punjabi film and music industry.". http://timesofindia.indiatimes.com/entertainment/punjabi/movies/news/First-Pollywood-directory-to-release-in-April/articleshow/19362189.cms. 
  9. "The theme of the film Police in Pollywood - Balle Balle by Gautam Productions is that the police will now direct and produce Punjabi films.". http://timesofindia.indiatimes.com/entertainment/punjabi/movies/news/Policemen-turn-filmmakers-in-Police-In-Pollywood-Balle-Balle/articleshow/38788880.cms. 
  10. "Pollywood Directory (A first of its own kind of initiative to organize Punjabi Cinema)". http://www.face2news.com/news/9734-kirron-kher-to-unveil-rangeen-world-pollywood-directory-on-august-25-at-chandigarh-press-club.aspx. 
  11. "According to NFDC, Punjabi film industry has produced 900 to 1,000 films till 2009.". http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Debt-ridden-Punjab-to-end-10-yr-waiver-of-entertainment-tax/articleshow/23674764.cms. 
  12. Gokulsing, K.; Wimal Dissanayake (2004). Indian popular cinema: a narrative of cultural change. Trentham Books. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85856-329-9.
  13. Encyclopedia of Indian Cinema.
  14. "The Sunday Tribune - Spectrum". tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2015.
  15. "mazhar.dk - An infotainment website". mazhar.dk. பார்க்கப்பட்ட நாள் 30 March 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]