மராத்தித் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மராத்தி திரையுலகம்
மெட்ரோ பிக் சினிமாஸ் - மும்பை
திரைகளின் எண்ணிக்கைகிட்டத்தட்ட 500 திரையரங்குகள் (மகாராட்டிரம்)[1]
முதன்மை வழங்குநர்கள்ரித்தேஷ் தேஷ்முக்
எஸ்ஸல் விஷன் புரொடக்சன்சு
எவரெஸ்டு என்டர்டெயின்மென்ட்
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2016)[2]
மொத்தம்181
நிகர நுழைவு வருமானம் (2016)[3]
தேசியத் திரைப்படங்கள்இந்தியா: 200 கோடி (US$25 மில்லியன்)

மராத்தி திரையுலகம் (Marathi cinema) என்பது இந்தியத் திரைத்துறையில் மராத்திய மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைக் குறிக்கிறது. இந்த மொழி இந்திய மாநிலமான மகாராட்டிர மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழியாகும். பழைய மும்பையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் இதன் திரைப்படத்துறையானது இந்தியாவின் முன்னோடி திரைப்படத்துறைகளில் மிகப் பழமையானவற்றில் ஒன்றாகும். முதல் மராத்தியர் படமானது தாதேசாகேப் டார்னேயின் ஸ்ரீ புண்டலிக் என்ற படம் ஆகும். இது மும்பையின், கரோனேசன்ஸ் சினிமாட்கிராஃப்பில், 1912 மே 18  அன்று வெளியானது.[4][5]

மராத்தி மொழியின் முதல் பேசும் திரைப்படமாக 'அயோத்தியேச்சா ராஜா' 1932 இல் வெளியானது.[6] இப்படம் இந்தியில் வெளியான முதல் பேசும் படமான ஆலம் ஆரா படம் வெளிவந்து ஒராண்டுக்குப் பிறகு வெளிவந்தது. மும்பையை அடிப்படையாகக் கொண்ட பெரிய சந்தையான இந்தித் திரையுலகைவிட மராத்தி திரையுலகம் சிறியதாக இருந்தாலும் வரி விலக்கு போன்ற சலுகைகளின் காரணமாக அண்மைய ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 1913 இல் வெளியான இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமாக அறியப்பட்டதும் தாதாசாகெப் பால்கே இயக்கிய படமுமான  ராஜா ஹரிஸ்சந்திரா, ஒரு மராத்தி படமாகும். அப்படத்தின் டைட்டில்கள் மராத்தியில் எழுதப்பட்டிருந்தன.  இந்திய திரையுலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு தாதாசாகெப் பால்கே விருது இந்திய அரசால், ஆண்டுதோறும் இந்திய சினிமாவுக்கான மிகப்பெரிய விருதாக வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]