ஆலம் ஆரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலம் ஆரா
இயக்குனர் அர்தேஷிர் இரானி
தயாரிப்பாளர் இம்பீரியல் மூவிடோன்
கதை ஜோசப் டேவிட்
முன்ஷி ஜாகீர் (உருது)
நடிப்பு மாஸ்டர் விட்டல்
சுபைதா
ஜில்லூ
சுசீலா
பிருத்விராஜ் கபூர்
இசையமைப்பு ஃபெரோஸ்ஷா எம். மிஸ்ட்ரி
பி. இரானி
ஒளிப்பதிவு வில்ஃபோர்டு டெமிங்
ஆடி. எம். இரானி (Adi M. Irani)
படத்தொகுப்பு எஸ்ரா மிர்
வெளியீடு மார்ச் 14, 1931
கால நீளம் 124 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி இந்தி

ஆலம் ஆரா இந்தியத் திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்தியாவின் முதல் பேசும் படம்[1][2]. இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி என்பவரது நிறுவனமான இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்தது.[3]

இந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

அர்தேஷிர் இரானி[தொகு]

இந்தப்படத்தை தயாரித்தது பற்றி இந்திய சினிமா வெள்ளி விழா நிகழ்வில் அர்தேஷிர் இரானியின் கூற்று: "பின்பற்றுவதற்கு எங்களுக்கு எந்த முன்மாதிரியும் அன்று இருக்கவில்லை, ஒலிப்பதிவு பற்றி ஒரு மாதம் பயிற்சி பெற்றோம், பார்ஸி நாடகமேடையிலிருந்து திரைக்கதை அமைத்துக் கொண்டோம். வசன எழுத்தாளர் இல்லை, பாடல் ஆசிரியர் இல்லை, ஒழுங்கற்ற கிறுக்கல்கள் மீது ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம். ஆரம்பித்தோம், நாடக மேடையில் பாடப்பட்டு வந்த பாடல்களை நானே தேர்ந்தெடுத்தேன். மெட்டுக்களைத் தேடிப்பிடித்தேன், தபேலா, ஹார்மோனியம், வயலின் இந்த மூன்றும் தான் இசைக்கருவிகள்" [3] [4]

சான்றடைவு[தொகு]

  1. Goddard, John. "Missouri Masala Fear not, St. Louisans: You don't need to go to Bombay to get your Bollywood fix" Riverfront Times, St. Louis, Missouri, 30 July 2003, Music section.
  2. Gokulsing, K.; Wimal Dissanayake (2004). Indian popular cinema: a narrative of cultural change. Trentham Books. பக். 24. ISBN 1-85856-329-1. http://books.google.co.in/books?id=_plssuFIar8C&pg=PA24&dq=Ayodhyecha+Raja+1932&cd=10#v=onepage&q=Ayodhyecha%20Raja%201932&f=false. 
  3. 3.0 3.1 சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988
  4. "Fifty Years of Indian Talkies" (1931-1981) A Commemorative Volume-1981-page-16

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்_ஆரா&oldid=1665023" இருந்து மீள்விக்கப்பட்டது