உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜா ஹரிஸ்சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா ஹரிஸ்சந்திரா
Raja Harishchandra
இயக்கம்தாதாசாகெப் பால்கே
தயாரிப்புதாதாசாகெப் பால்கே
பால்கே பிலிம்சு
கதைதாதாசாகெப் பால்கே
நடிப்புடி. டி. தாப்கே
பி. ஜி. சானே
ஒளிப்பதிவுதிரிம்பாக் பி. தெலாங்கு
வெளியீடு3 மே 1913
ஓட்டம்40 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஊமைப்படம்

ராஜா ஹரிஸ்சந்திரா (Raja Harischandra) என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 1913 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஊமைப்படம் ஆகும். பிரபல இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் தாதாசாகெப் பால்கேயின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது முழுநீளத் திரைப்படம் ஆகும்.[1] இந்தியத் தொன்மக் கதைத்தலைவர்களில் ஒருவனான அரிச்சந்திரன் பற்றிய கதையைத் தழுவி இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. இது 1913 ஆம் ஆண்டு மே 3 ஆம் நாள் வெளிவந்தது.

ஒரேயொரு பிரதி மட்டுமே தயாரிக்கப்பட்டு மும்பை கொரொனேசன் சினிமா மண்டபத்தில் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. வணிக ரீதியில் வெற்றி பெற்று, இவ்வகையான மேலும் பல திரைப்படங்களை உருவாக்க இத்திரைப்படம் வழிவகுத்தது.[2]

மும்பை கொரொனேசன் மண்டபக் காட்சிக்கான விளம்பரம்

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Overview த நியூயார்க் டைம்ஸ்.
  2. Ramesh Dawar (1 January 2006). Bollywood Yesterday Today and Tomorrow. Star Publications. pp. 1987–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905863-01-3. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_ஹரிஸ்சந்திரா&oldid=3660804" இலிருந்து மீள்விக்கப்பட்டது