உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாள அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள அரசு
नेपाल सरकार
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைநேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு
தலைமையகம்சிங்க தர்பார், காட்மாண்டு
அமைச்சர்
அமைப்பு தலைமை
  • இராஜேந்திர கிசோர் சத்திரி, தலைமைச் செயலாளர்
வலைத்தளம்www.nepal.gov.np/NationalPortal/EN

நேபாள அரசு (Government of Nepal) (நேபாளி: नेपाल सरकार), நேபாளத்தின் உயர் நிர்வாக அமைப்பும், மைய அரசாகும்.

நேபாள இராச்சியத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படுவதற்கு முன்னர் நேபாள அரசை மன்னரின் மாட்சிமை வாய்ந்த அரசு என அழைக்கப்பட்டது.(நேபாளி: श्री ५ को सरकार).[1]

நேபாள நாட்டின் அதிபராக குடியரசுத் தலைவரும், நேபாள அரசின் நிர்வாகத் தலைவராக பிரதம அமைச்சரும் செயல்படுகின்றனர்.

நேபாள நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம அமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரைகளின் படி, குடியரசுத் தலைவர் செயலாற்றுகிறார்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் சடங்கு பூர்வமானதே.

நேபாளத்தின் அரசியலமைப்புக்குட்பட்ட அமைப்புகளின் தலைவர்களை, அமைச்சரவையின் பரிந்துரைகளின் படியே, குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். விதிவிலக்காக, நேபாள அரசின் தலைமை வழக்கறிஞரை மட்டும் பிரதம அமைச்சரே நியமிப்பார்.

வரலாறு[தொகு]

1768ல் ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா, ஒன்றுபட்ட நேபாள இராச்சியத்தை நிறுவினார்.

பின்னர் மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா ஆட்சிக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனை வழங்க மூல்-கஜி எனும் பதவிப் பெயரில் பிரதம அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.

நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா 1806ல் முக்தியார் எனும் பிரதம அமைச்சர் பதவியை உருவாக்கினார். நாட்டின் அன்றாட நிர்வாகத்தின் தலைமை அலுவலராக முக்தியார் செயல்பட்டார்.[2][3][4]

15 செப்டம்பர் 1846 முதல் ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா, நேபாள மன்னர்களை கைப்பாவை பொம்மை அரசர்களாகக் கொண்டு, அவரது வழித்தோன்றல்கள், நேபாள பிரதம அமைச்சர்களாக 1951 முடிய பதவி வகித்தனர்.

ராணா வம்ச பரம்பரை பிரதம அமைச்சர்களுக்குப் பின்[தொகு]

நேபாள அரசின் தலைவர்கள்[தொகு]

நிர்வாகத் தலைவர்கள்[தொகு]

நாடாளுமன்ற அவைத் தலைவர்கள்[தொகு]

நீதித் துறை[தொகு]

  • நேபாள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்: தீபக் ராஜ் ஜோஷி (தற்காலிகம்)[5]

நேபாள அமைச்சரவை[தொகு]

அமைச்சகம் அமைச்சர் பதவியேற்ற நாள்
பிரதம அமைச்சர் கட்க பிரசாத் சர்மா ஒளி 15 பிப்ரவரி 2018
உள்துறை ராம் பகதூர் தாபா 26 பிப்ரவரி 2018
நிதித்துறை யுவ ராஜ் கட்டிவாடா 26 பிப்ரவரி 2018
வெளியுறவுத் துறை பிரதீப் குமார் குவாலி 16 மார்ச் 2018
பாதுகாப்புத் துறை ஈஸ்வர் பொக்ரேல் 26 பிப்ரவரி 2018
கூட்டாட்சி விவகாரம் மற்றும் பொது நிர்வாகத் துறை லால் பாபு பண்டிட் 16 மார்ச் 2018
கல்வித் துறை கிரிராஜ் மணி பொக்ரேல் 16 மார்ச் 2018
உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை ரகுவீர மகாசேத் 16 மார்ச் 2018
காடுகள் மற்றும் சூற்றுச்சூழல் துறை சக்தி பசனேத் 16 மார்ச் 2018
தொழில், வணிகம் மற்றும் விநியோகத் துறை மாத்திரிக பிரசாத் யாதவ் 26 பிப்ரவரி 2018
பண்பாடு, சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை ரவீந்திர பிரசாத் அதிகாரி 16 மார்ச் 2018
தகவல் மற்றும் செய்தித் தொடர்புத் துறை
வேளாண்மை, நிலநிர்வாகம் மற்றும் கூட்டுறவு அமைச்சகம் சக்கரபாணி கனால் 16 March 2018
தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கோகர்ண பிஸ்தா 16 மார்ச் 2018
நகர வளர்ச்சி அமைச்சகம்
சட்டம், நீதி, நாடாளுமன்ற விவகார அமைச்சகம் செர் பகதூர் தமாங் 16 மார்ச் 2018
நீர் ஆதாரங்கள் மற்றும் ஆற்றல் திறன் அமைச்சகம் பர்சமன் பூன் 16 மார்ச் 2018
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் தம் மாயா தாபா 15 பிப்ரவரி 2018
சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை அமைச்சகம்
நீர் விநியோக அமைச்சகம் வீணா மகர் 16 மார்ச் 2018
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஜெகத் பகதூர் விஸ்வகர்மா 16 மார்ச் 2018

அரசியலமைப்புச் சட்டத்தின் அமைப்புகள்[தொகு]

அரசியலமைப்பு நிறுவனங்கள் தலைவர்
பதவிப் பெயர் தற்போதைய தலைவர்
அதிகார துஷ்பிரயோக விசாரணை ஆணையம் தலைமை ஆணையாளர் நவீன் குமார் கிமிரே
அரசு தலைமை வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் அக்னி கரோல்
அரசு தலைமை தணிக்கையாளர் ஆடிட்டர் ஜெனரல் தங்க மணி சர்மா
தேர்தல் ஆனையம் தலைமை தேர்தல் ஆணையாளர் அயோத்தி பிரசாத் யாதவ்
பணியாளர் தேர்வு ஆணையம் தலைவர் உமேஷ் மைனாலி
தேசிய மனித உரிமை ஆணையம் தலைவர் அனுப் ராஜ் சர்மா

நேபாள பாதுகாப்புத் துறைகள்[தொகு]

பாதுகாப்புத் துறைகள் தலைமை முகமை
பதவிப் பெயர் தற்போதைய நபர்
இராணுவம் தலைமைப் படைத் தலைவர் ஜெனரல். இராஜேந்திர சேத்திரி
காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரகாஷ ஆர்யால்
காவல்துறை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சிங்க பகதூர் சிரேஸ்தா
தேசிய புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் திலீப் ராஜ் ரெக்மி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GoN National Portal". www.nepal.gov.np (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-04.
  2. Nepal, Gyanmani (2007). Nepal ko Mahabharat (in Nepali) (3rd ed.). Kathmandu: Sajha. p. 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789993325857.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. https://www.collinsdictionary.com/dictionary/hindi-english/%E0%A4%AE%E0%A5%81%E0%A4%96%E0%A5%8D%E0%A4%AF
  4. https://www.collinsdictionary.com/dictionary/hindi-english/%E0%A4%85%E0%A4%96%E0%A4%BC%E0%A5%8D%E0%A4%A4%E0%A4%BF%E0%A4%AF%E0%A4%BE%E0%A4%B0
  5. "Judiciary Body". Archived from the original on 2018-08-31. பார்க்கப்பட்ட நாள் 2018-04-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_அரசு&oldid=3599973" இலிருந்து மீள்விக்கப்பட்டது