1950 இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை
31 சூலை 1950 அன்று நேபாளப் பிரதமர் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா மற்றும் இந்தியத் தூதுவர் சந்திரேஷ்வர் நாராயணன் சிங்கும் உடன்படிக்கையில் கையொப்பமிடல்
ஒப்பந்த வகைஇருதரப்பு ஒப்பந்தம்
கையெழுத்திட்டது31 சூலை 1950 (1950-07-31)
இடம்காட்மாண்டு
முத்திரையிட்டது31 சூலை 1950 (1950-07-31)
நடைமுறைக்கு வந்தது31 சூலை 1950 (1950-07-31)
நிலைநடப்பில்
தரப்புகள்
மொழிகள்

1950 இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை (1950 India-Nepal Treaty of Peace and Friendship) நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையே அமைதி மற்றும் நட்பை தொடர்ந்து பேணுவதற்கு, 31 சூலை 1950 அன்று ஏற்படுத்திக் கொண்ட இருதரப்பு ஒப்பந்தம் ஆகும். இந்த உடன்படிக்கையில் நேபாளப் பிரதமர் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா மற்றும் இந்தியத் தூதுவர் சந்திரேஷ்வர் நாராயணன் சிங் ஆகியோர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். [1]

இந்த உடன்படிக்கை ஏற்பட்ட மூன்று மாத காலத்தில் நேபாளத்தின் பரம்பரை முதலமைச்சர்களான ராணா வம்சத்தினர் ஆட்சி முடிவிற்கு வந்தது. இந்த உடன்படிக்கையின் படி, இரு நாட்டு மக்களும் நேபாளத்திலும், இந்தியாவிலும் கடவுச்சீட்டு மற்றும் விசா இன்றி பயணிக்க வழிவகை செய்தது.[2] இந்த உடன்படிக்கையால் கோர்க்கா மக்கள் இந்திய இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற முடிந்தது. நேபாள மன்னர் 1952-இல் கொண்டு வந்த நேபாள குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பாக பிகார் மாநில இந்தியர்கள் நேபாளத்தின் தராய் பிரதேசத்தில் குடியேறவும், நேபாள குடியுரிமை பெறவும் வழிவகை செய்தது.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India willing to review 1950 treaty". Archived from the original on 2019-02-17. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
  2. "Nepal Immigration Manual, Section 8.4" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.