உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2006 மக்கள் ஜனநாயகப் போராட்டத்தின் விளைவாக [1] நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம், 28 மே 2008ல் நேபாள நாட்டை சமயச்சார்பற்ற, நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு[2] (Federal Democratic Republic of Nepal) என அறிவித்தது.[3][4] இதனால் 240 ஆண்டுகால நேபாள மன்னராட்சி முடிவிற்கு வந்தது. மேலும் இதனை தற்காலிக நேபாள அரசியலமைப்புச் சட்டமும் உறுதிப்படுத்தியது.

நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் முதல் பிரதம அமைச்சராக கிரிஜா பிரசாத் கொய்ராலா 28 மே 2008 அன்று பொறுப்பேற்றார்.[5][6][7] நேபாளி காங்கிரஸ் கட்சியின் கிரிஜா பிரசாத் கொய்ராலா 18 ஆகஸ்டு 2008 அன்று பிரதம அமைச்சர் பதவியிலிருந்து விலகியதால், நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) கட்சியின் பிரசந்தா என்ற புஷ்ப கமல் தகால், 18 ஆகஸ்டு 2008 அன்று பிரதம அமைச்சராக பதவியேற்றார்.[6][7]

நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவராக ராம் பரன் யாதவ், 23 சூலை 2008 அன்று பொறுப்பேற்றார்.

சிறப்பம்சங்கள்

[தொகு]
  • நேபாளத்தில் 240 ஆண்டுகால ஷா வம்ச மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. முன்னாள் நேபாள மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள், அரச குடும்பச் சலுகைகள் இழந்து, சாதாரண பொதுமக்களாக கருதப்பட்டனர்.
  • இவ்வறிப்பு வெளியான 15 நாட்களில் நேபாள மன்னரும், மன்னர் குடும்பத்தினரும் நாராயணன்ஹிட்டி அரண்மனையை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
  • நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் முதல் தலைவராக ராம் பரன் யாதவ், 23 சூலை 2008 அன்று பொறுப்பேற்றார்.
  • 23 சூலை 2008 அன்று நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராக ராம் பரன் யாதவ் பொறுப்பேற்றார்.
  • நாராயணன்ஹிட்டி அரண்மனை வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
  • நேபாள அரசியலமைப்புச் சட்டப்படி, 20 செப்டம்பர் 2015 அன்று, நேபாளத்தை ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
  • நாட்டின் உயர்தலைவரான குடியரசுத் தலைவருக்கு முப்படைகளின் தலைமை அதிகாரியாகவும், அரசியல் அமைப்புச் சட்டப்படி, பணிபுரிய வேண்டும். அமைச்சரவையின் பரிந்துரையின் படி முப்படைகளை திரட்ட வேண்டும்.
  • 28 மே 2008 அன்று நேபாளம் தனது முதல் குடியரசு நாள் மற்றும் தியாகிகள் நாளையும் கொண்டாடியது.

2008 முதல் நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் பிரதம அமைச்சர்கள் & குடியரசுத் தலைவர்கள்

[தொகு]
வ. எண் படம் பெயர்
(பிறப்பு-இறப்பு)
பதவிக் காலம் அரசியல் கட்சி அமைச்சரவை குடியரசுத் தலைவர்கள்
(1. பதவிக் காலம்)
(2. அரசியல் கட்சி)
பதவியேற்ற நாள் விலகிய நாள் நாட்கள்
(32) கிரிஜா பிரசாத் கொய்ராலா
(1925–2010)
ஐந்தாம் முறை
28 மே 2008[5][6][7] 18 ஆகஸ்டு 2008[6][7] 82 நேபாளி காங்கிரஸ் 2008 கொய்ராலா அமைச்சரவை ராம் பரன் யாதவ்

(1. 23 சூலை 2008-29 அக்டோபர் 2015)
(2. நேபாளி காங்கிரஸ்)
33 புஷ்ப கமல் தகால்
(1954–)
முதன் முறை
18 ஆகஸ்டு 2008 25 மே 2009 280 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) 2008 பிரசந்தாவின் அமைச்சரவை
34 மாதவ் குமார் நேபாள்
(1953–)
25 மே 2009 6 பிப்ரவரி 2011 622 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2009 மாதவ்குமாரின் அமைச்சரவை
35 சாலா நாத் கனால்
(1950–)
6 பிப்ரவரி 2011 29 ஆகஸ்டு 2011 204 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2011 கனால் அமைச்சரவை
36 பாபுராம் பட்டாராய்
(1954–)
29 ஆகஸ்டு 2011 14 மார்ச் 2013 563 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) 2011 பாபுராம் பட்டாராய் அமைச்சரவை
கில் ராஜ் ரெக்மி
(1949–)
தற்காலிக பிரதம அமைச்சர்
14 மார்ச் 2013 11 பிப்ரவரி 2014 334 சுயேச்சை 2013 ரெக்மி இடைக்கால அமைச்சரவை
37 சுசில் கொய்ராலா
(1939–2016)
11 பிப்ரவரி 2014 12 அக்டோபர் 2015 608 நேபாளி காங்கிரஸ் சுசில் கொய்ராலா அமைச்சரவை
38 கட்க பிரசாத் சர்மா ஒளி
(1952–)
12 அக்டோபர் 2015 4 ஆகஸ்டு 2016 297 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2015 கே. பி. அமைச்சரவை வித்யா தேவி பண்டாரி

(1. 29 அக்டோபர் 2015-)
(2. நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்))
(33) புஷ்ப கமல் தகால்
(1954–)
இரண்டாம் முறை
4 ஆகஸ்டு 2016[8][8] 31 மே 2017 300 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) 2016 புஷ்ப கமல் அமைச்சரவை
(32) செர் பகதூர் தேவ்பா
(1946–)
நான்காம் முறை
7 சூன் 2017[9] 15 பிப்ரவரி 2018 2659 நேபாளி காங்கிரஸ் 2017 செர் பகதூர் தேவ்பா அமைச்சரவை
38 கட்க பிரசாத் சர்மா ஒளி
(1952–)
15 பிப்ரவரி 2018 [10][11] பதவியில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2018 கே. பி. ஒளி அமைச்சரவை

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. General Federation of Nepalese Trade Unions: Honour Nepali Sentiment; Continue support to Jana Andolan II பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம்
  2. Federal Democratic Republic of Nepal
  3. Nepal declares itself a democratic republic
  4. "Federal Democratic Republic of Nepal". Archived from the original on 2021-02-10. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.
  5. 5.0 5.1 nepalnews [www.nepalnews.com/archive/2008/jul/jul23/news08.php www.nepalnews.com/archive/2008/jul/jul23/news08.php]. பார்க்கப்பட்ட நாள் 2017-12-12. {{cite web}}: Check |url= value (help); Missing or empty |title= (help)
  6. 6.0 6.1 6.2 6.3 cnn http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/06/26/nepal.resigns/. பார்க்கப்பட்ட நாள் 2017-12-12. {{cite web}}: Missing or empty |title= (help)
  7. 7.0 7.1 7.2 7.3 bbc http://news.bbc.co.uk/2/hi/south_asia/7475112.stm. பார்க்கப்பட்ட நாள் 2017-12-12. {{cite web}}: Missing or empty |title= (help)
  8. 8.0 8.1 "Pushpa Kamal Dahal Prachanda sworn in as new Nepal PM" (in en). http://www.hindustantimes.com/. 2016-08-04. http://www.hindustantimes.com/world-news/pushpa-kamal-dahal-prachanda-sworn-in-as-new-nepal-pm/story-fxTybu9KE84daJKaxW03lI.html. 
  9. "You are being redirected..." thehimalayantimes.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.
  10. KP Sharma Oli appointed Nepal's new prime minister
  11. K P Sharma Oli becomes Nepal PM for second time

வெளி இணைப்புகள்

[தொகு]