மக்காலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மக்காலு
Himalaya annotated.jpg
எவரெஸ்ட் மலையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள மக்காலு
உயரம் 8,462 மீட்டர் (27,762 அடி)
அமைவிடம் நேபாளம்-சீனா (திபெத்து)
தொடர் இமயமலை
சிறப்பு 8,462 மீ உயரத்தில் 5ஆவது
ஆள்கூறுகள் 27°53′03″N 87°05′20″E / 27.88417°N 87.08889°E / 27.88417; 87.08889
முதல் ஏற்றம் மே 15 1955 லியோனெல் டெர்ரே(Lionel Terray) and ழ்ஜான் கூசி(Jean Couzy)
சுலப வழி நுரைபனி-பனிப்பாளம் ஏற்றம்.

மக்காலு (நேபாளத்தில் ஏற்புடைய பெயர் मकालु'; சீனாவில் ஏற்புடைய பெயர் மக்காரு:马卡鲁山; பின்யின்:மக்காலு ஷான் Mǎkǎlǔ Shān) உலகிலேயே ஐந்தாவது உயரமான மலை. இது இமய மலைத் தொடரில் எவரெஸ்ட் மலைக்கு கிழக்கே 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மக்காலு தனி முகடாக நாங்கு முகம் கொண்ட சதுரவடி கூம்புப் பட்டகம் போல் உள்ளது. மலையின் உச்சி கடல் மட்டத்தில் இருந்து 8,462 மீட்டர் ((27,762 அடி) உயரத்தில் உள்ளது. உயரமான பின்புல மலைப்பகுதியில் இருந்து இதன் தனி முகடு மட்டுமே 2,386 மீ (7,828 அடி) நிற்கின்றது.

மக்காலு மலையை ஒட்டி இரு துணை முகடுகள் உள்ளன. அவற்றுள் வடமேற்கே ஏறத்தாழ 3 கி.மீ தொலைவில் கங்ச்சுங்ஸ்ட்டே (Kangchungtse,) அல்லது மக்காலு-2 என்னும் மலைமுகடு உள்ளது. அதன் உயரம் 7,678 மீ (25,190 அடி). மக்காலு மலைக்கு 4 கி.மீ தொலைவில் மக்காலு-2 உடன் ஒட்டி இரண்டாவது துணை முகடு உள்ளது. இதன் பெயர் சோமோ லோன்சோ (Chomo Lonzo). இதன் உயரம் 7,818 மீ (25,650 அடி).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்காலு&oldid=1396765" இருந்து மீள்விக்கப்பட்டது