கட்க பிரசாத் சர்மா ஒளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கட்க பிரசாத் சர்மா ஒளி
खड्ग प्रसाद ओली
கட்க பிரசாத் சர்மா ஒளி
38ஆவது நேபாள பிரதம அமைச்சர்கள்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 பிப்ரவரி 2018
குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி
முன்னவர் செர் பகதூர் தேவ்பா
பதவியில்
12 அக்டோபர் 2015 – 4 ஆகத்து 2016
குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி
முன்னவர் சுசில் கொய்ராலா
பின்வந்தவர் பிரசந்தா
தலைவர் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூலை 2014
முன்னவர் சாலா நாத் கனால்
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
2006–2007
நேபாள உள்துறை அமைச்சர்
பதவியில்
1994–1995
தனிநபர் தகவல்
பிறப்பு 22 பெப்ரவரி 1952 (1952-02-22) (அகவை 68)
தேஹ்ரதும், நேபாளம்
அரசியல் கட்சி நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)
வாழ்க்கை துணைவர்(கள்) ராதிகா சக்கியா
இணையம் Official website

கட்க பிரசாத் சர்மா ஒளி அல்லது கே. பி. சர்மா ஒளி (ஆங்கில மொழி: Khadga Prasad Sharma Oli or K. P. Sharma Oli) (நேபாளி: खड्ग प्रसाद शर्मा ओली; பிறப்பு: 22 பிப்ரவரி 1952), நேபாளத்தின் 38வது பிரதம அமைச்சராக 11 அக்டோபர் 2015 முதல் 3 ஆகஸ்டு 2016 முடிய இருந்தவர்.[1] நேபாள மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் தலைவரான கட்க பிரசாத் ஒளி, 2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பிரதம அமைச்சர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

மோகன் பிரசாத் ஒளி - மதுமாயா இணையருக்கு 22 பிப்ரவரி 1952ல், கிழக்கு நேபாளத்தின் நேபாள மாநில எண் 3ல் உள்ள தேஹ்ரதுமில் பிறந்தவர்.[2][3][4] துவக்கக் கல்வியை தேஹ்ரதுமிலும், மேனிலை பள்ளிக் கல்வியை ஜாபாவிலும் பயின்றார்.[5]

இளங்கலை முதலாண்டு தேர்வு முடித்தவுடன் சிறைக்கு சென்று திரும்பிய சர்மா ஒளிக்கு, ராதிகா சாக்கியா எனும் பொதுவுடமை சிந்தனை கொண்டவருடன் திருமணம் செய்து கொண்டார்.[6]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மார்க்சிஸ்ட் கிளர்ச்சிகள் 1966 - 1991[தொகு]

1960ன் துவக்கத்தில் அரசியல் கட்சிகள் அற்ற பஞ்சாயத்து முறையில் அரசு அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில், கே. பி. சர்மா ஒளி, 1970ல் நேபாள பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார். சர்மா ஒளி 1973 முதல் 1987 முடிய தொடர்ந்து 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த கே. பி. ஒளி, நேபாள பொதுவுடமைக் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் மத்தியக் குழு உறுப்பினாகவும், லும்பினி மண்டல பொறுப்பாளராகவும் 1990 முடிய பணியாற்றியனார்.

பல கட்சி ஜனநாயக அரசியல் 1991 - தற்போது வரை[தொகு]

1990 மக்கள் புரட்சி காரணமாக, நேபாளத்தில் முழுமையான முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, அரசியலமைப்பிற்குட்பட்ட முடியாட்சி முறைக்கு வித்திட்டது. மேலும் அரசியல் கட்சிகள் அற்ற நேபாள பஞ்சாயத்து ஆட்சி]] முறை ஒழிக்கப்பட்டது.[7] 1922ல் நேபாள பொதுவுடமை (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் வெளியுறக் குழுவின் தலைவராக இருந்த கே. பி. சர்மா ஒளி, நேபாள ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பை நிறுவினார்.

1991ல் நேபாள நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்திற்கு]], ஜாப்பா மாவட்டத் தொகுதி எண் 6லிருந்து கெ. பி. சர்மா ஒளி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 - 1995ல் நேபாள அரசின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். இரண்டாம் முறையாக 1999ல் ஜாப்பா மாவட்டத் தொகுதி எண் 2லிருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006ல் நேபாள இடைக்கால அரசில், கே. பி. சர்மா ஒளி, நேபாள துணை பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8][9] கே. பி. சர்மா ஒளி, ஏப்ரல் 2006 2007 முடிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2013ல் முதல் அரசியலமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலில் ஜாப்பா தொகுதி எண் 7லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 4 பிப்ரவரி 2014ல் நடைபெற்ற இரண்டாவது அரசியலமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்ற கே. பி. சர்மா ஒளி, நேபாள பொதுவுடமை (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] சூலை, 2014ல் கே. பி. சர்மா ஒளி, நேபாள பொதுவுடமை (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11][12]

12 அக்டோபர் 2015ல் கே. பி. சர்மா ஒளி, நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஆதரவுடன், நேபாள பிரதம அமைச்சராக தேந்தெடுக்கப்பட்டார்.[13]

13 சூலை 2016ல் மாவோயிஸ்ட் கட்சி சர்மா ஒளி அரசுக்கான ஆதரவை விலக்கவே, 24 சூலை 2016ல் கே. பி. சர்மா ஒளி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் கே. பி. சர்மா ஒளி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றியது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Oli I elected 38th Prime Minister of Nepal (Update)". பார்த்த நாள் 11 October 2015.
 2. "Read a brief biography on newly elected PM KP Sharma Oli". Kantipur Publications. பார்த்த நாள் 8 December 2017.
 3. "The Original Maoist". Nepali Times. http://www.nepalitimes.com/blogs/thebrief/2015/10/11/the-original-maoist/. 
 4. "KP Sharma Oli-why Nepal's new PM isn't the right man for the job". catchnews.com. http://www.catchnews.com/international-news/kp-sharma-oli-why-nepal-s-new-pm-isn-t-the-right-man-for-the-job-1444823268.html. 
 5. Sharma Manohar, "Oli ko Jeevani (Life of Oli)", Jana Astha National Weekly, 12th January 2004. Page 12
 6. "Jeevan saathi with Mr & Mrs. K.P. Oli". Himalaya TV. பார்த்த நாள் 8 December 2017.
 7. HIMAL SOUTHASIAN | March - April 2006
 8. "Nepal calls ceasefire with rebels". பிபிசி. 3 May 2006. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4969422.stm. பார்த்த நாள்: 15 July 2012. 
 9. "Seven Cabinet Members Formed". US Embassy, Kathmandu. பார்த்த நாள் 21 September 2015.
 10. "Oli elected as UML PP leader". eKantipur. 4 February 2014. http://www.ekantipur.com/2014/02/04/top-story/oli-elected-as-uml-pp-leader/384914.html. பார்த்த நாள்: 4 February 2014. 
 11. "The Himalayan Times: Oli elected UML chairman mixed results in other posts – Detail News: Nepal News Portal". The Himalayan Times. 15 July 2014. http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=KP+Oli+elected+as+CPN-UML+chairman&NewsID=421225. பார்த்த நாள்: 15 July 2014. 
 12. "Nepal congratulates Oli for election victory". Myrepublica.com. 15 July 2014. http://www.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=79047. பார்த்த நாள்: 15 July 2014. 
 13. "Nepal's new premier names protest group leaders as deputies", Associated Press, 12 October 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

Party political offices
முன்னர்
சாலா நாத் கனால்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி தலைவர்
2014–தற்போது வரை
பதவியில் உள்ளார்
அரசியல் பதவிகள்
முன்னர்
சுசில் கொய்ராலா
பிரதம அமைச்சர்
2015–2016
பின்னர்
பிரசந்தா