நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நேப்பாள நாடாளுமன்ற தேர்தல், 2017 (Nepalese legislative election, 2017) 334 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றம், 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள பிரதிநிதிகள் சபை எனும் கீழவையும், 59 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள தேசிய சபை எனும் மேலவை என ஈரவை முறைமையுடன் கூடியது.

தற்போது நேபாள பிரதிநிதிகள் சபையின் 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 அன்று இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றது.[1][2] தேர்ந்தெடுக்கப்பட்ட 275 நேபாள பிரதிநிதிகள் சபையின், பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதம அமைச்சர் தேர்வு செய்யப்படுவார்.

இத்தேர்தலுடன் நேபாளத்தின் ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலும் நடைபெற்றது.

பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்தல் முறை[தொகு]

இட ஒதுக்கீடு[தொகு]

நேபாள நாடாளுமன்றத்திற்கு மகளிர், தலித், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமயச் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளும், கூட்டணிகளும்[தொகு]

இடதுசாரி கூட்டணியில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் நேபாள நவ சக்தி கட்சிகள் போட்டியிடுகிறது. [5]

ஜனநாயக கூட்டணியின் சார்பில் நேபாளி காங்கிரஸ், ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி, மற்றும் மதேசி மக்களின் அரசியல் கட்சிகள், இடதுசாரி கூட்டணிக்கு எதிராக களம் இறங்கியுள்ளது. [6]

வாக்கு எண்ணிக்கை[தொகு]

26 நவம்பர் 2017 அன்று முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2017 அன்றும்[7], 7 டிசம்பர் 2017 அன்று நடைபெற்ற இரண்டாம் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 8 டிசம்பர் 2017 அன்றும் துவங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 15 டிசம்பர் 2017க்குள் வெளியிடப்படும்.

இத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 10,587,521 (68.63%) ஆகும்.

பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவுகள்[தொகு]

நேரடித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்[தொகு]

275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தின், 165 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் முறையில் பிரதிநிதிகள் சபைக்கு வாக்காளர்களால் தேர்ந்தேடுக்கப்பட்டனர்.[8]

மறைமுகத் தேர்வில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்[தொகு]

நேபாள பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் 10,587,521 (68.63%) வாக்குகள் பதிவானது. நேபாளத்தின் புதிய 2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள வாக்களிப்பு முறைப் படி, மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் ஓன்றியம், நேபாளி காங்கிரஸ், மாவோயிஸ்ட், ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி, சோசலிச கூட்டமைப்பு கட்சி என ஐந்து அரசியல் கட்சிகள் மட்டுமே, பதிவான வாக்குகளில் மூன்று விழுக்காடு மற்றும் அதற்கு அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால், அக்கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகளுக்கு ஏற்றவாறு 110 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.[9]

பதிவான வாக்குகளில் மூன்று சதவீத விகிதாசார வாக்குகள் பெறாத காரணத்தினால், ராஷ்டிரிய பிரஜா தந்திர ஜனநாயக கட்சி, புதிய சக்தி கட்சி, ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா கட்சி மற்றும் நேபாள தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநித்துவ இடங்கள் ஒதுக்கப்படவில்லை. மேலும் மூன்று சதவீத (%) வாக்குகள் பெறாத அரசியல் கட்சிகளின் நேரடித் தேர்வில் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை, நேபாள பிரதிநிதிகள் சபையில் சுயேட்சை உறுப்பினர்களுக்கான தகுதி வழங்கப்படும்.

House of Representatives Nepal 2017.svg
அரசியல் கட்சி சின்னம் நேரடி தேர்தலில் விகிதாசாரத்தில் மொத்த
இடங்கள்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் (சிவப்பு நிறப்புள்ளிகள்) 80 3,173,494 33.25 41 121
நேபாளி காங்கிரஸ் (பச்சை நிறப்புள்ளிகள்) 23 3,128,389 32.78 40 63
மாவோயிஸ்ட் (மெருன் நிறப்புள்ளிகள்) 36 1,303,721 13.66 17 53
இராஷ்டிரிய ஜனதா கட்சி (பிங்க் நிறப்புள்ளிகள்) 11 472,254 4.95 6 17
பெடரல் சோசலிஸ்ட் கட்சி (காவி நிறப்புள்ளிகள்) 10 470,201 4.93 6 16
ராஷ்டிரிய பிரஜா தந்திர ஜனநாயகக் கட்சி 1 196,782 2.06 0 1
புதிய சக்தி கட்சி 1 81,837 0.86 0 1
ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா கட்சி 1 62,133 0.65 0 1
தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி 1 56,141 0.59 0 1
சுயேட்சை 1 0 1
மொத்தம் 165[10] 110 275

நேபாள தேசிய சபை தேர்தல் முடிவுகள்[தொகு]

நேபாள தேசிய சபையின் 59 உறுப்பினர்களை, ஏழு நேபாள மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி மற்றும், கிராமிய நகராட்சிகளின் மேயர்/துணை மேயர் மற்றும் தலைவர்/துணைத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இத்தேர்தல் பிரதிநிதிகள் சபை முடிந்த பிறகு அறிவிக்கப்படும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]