உள்ளடக்கத்துக்குச் செல்

கோர்க்கா நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gorkha's war flag
கோர்க்கா அரசு மேலோங்கியிருந்த காலத்தில் கோர்க்கா நாட்டின் வரைபடம்
கி பி 1763-இல் கோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா வெளியிட்ட நாணயம்
கி பி 1907-இல் கோர்க்கா அரசு வெளியிட்ட அஞ்சல் தலை
கோர்க்கா நாட்டு அரசிதழ், 9 சனவரி 1933

கோர்க்கா நாடு (Gorkha Kingdom) (ஆட்சிக் காலம்: 1559 - 2008) என்பது தற்கால நேபாளத்தின் முன்னாள் நாடுகளில் ஒன்றாகும். 24 குறுநிலங்களின் தொகுப்பான சௌபீஸ் இராச்சியம் என்றும் அழைக்கப்படும்.[1] கோர்க்கா நாடு மேற்கில் மர்சியாந்தி ஆறு முதல் கிழக்கில் திரிசூலி ஆறு வரை பரவியிருந்தது.[2] ஷா வம்சத்து மன்னர்கள் கோர்க்கா நாட்டை கி பி 1559 முதல் 2008 முடிய ஆண்டனர்.

ஷா வம்சம்

[தொகு]

கி பி 1559-ஆம் ஆண்டில் திரவிய ஷா என்பவர் கோர்க்கா பகுதியின் மன்னரை வென்று ஷா வம்ச ஆட்சியை கோர்க்கா நாட்டில் நிறுவினார். [3][4]

விரிவாக்கமும் & படையெடுப்புகளும்

[தொகு]

கி பி 1736-இல் கோர்க்காலிகளின் மன்னர் நரபூபால ஷா தொடங்கி வைத்த நாட்டின் விரிவாக்கத்திற்கான போர்களை, அவரது மகன் பிரிதிவி நாராயணன் ஷா மற்றும் பேரன் ராணா பகதூர் ஷா ஆகியோர் நடத்திய கீர்த்திப்பூர் போர், காட்மாண்டுப் போர் மற்றும் பக்தபூர் போர்களால் நேபாளத்தின் கிழக்கிலும், மேற்கிலும் பெரும்பாலான பகுதிகளை கோர்க்கா நாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.[5][6]

கி பி 1745-இல் நேவார் அரச குலத்தினர் ஆண்ட காத்மாண்டு சமவெளியை கோர்க்கா மன்னர் தொடர்ந்து ஆண்டுக் கணக்கில் முற்றுக்கையிட்டார். நேவார் மன்னர் கோர்க்களின் முற்றுகையை முறியடிக்க கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களின் உதவியை நாடினார். நேவாரிகளை காக்க வந்த கேப்டன் கின்லோச் தலைமையிலான கிழக்கிந்திய படையினரது முயற்சி தோல்வியில் முடிந்தது. [7]முற்றுகையின் இறுதியில் கி பி 1768 - 1769-ஆம் ஆண்டுக்குள் நேவாரிகளின் மூன்று தலைநகரங்களான காத்மாண்டு, பதான் மற்றும் லலித்பூர் மற்றும் காட்மாண்டு நகரங்கள் கோர்க்கர்களிடம் அடிபணிந்தன.

பின்னர் கோர்க்கா நாட்டின் தலைநகராக காத்மாண்டு நகரம் விளங்கியது.[8]

1788-ஆம் ஆண்டில் கோர்க்கர்கள் திபெத் நாட்டின் மீது படையெடுத்து,[9] கியுரோங் மற்றும் நயாலம் நகரங்களை கைப்பற்றி; திபெத் நாட்டு மன்னரிடம் ஆண்டு தோறும் திறை வசூலித்தனர். 1791-இல் திறை திபெத் நாட்டவர்கள் கோர்க்கா மன்னருக்கு திறை செலுத்தாத படியால் மீண்டும் திபெத் மீது படையெடுத்து அங்குள்ள் பௌத்த விகாரங்களை பாழ்படுத்திச் செல்கையில், திபெத்தியர்களின் உதவிக்கு வந்த சீனர்களின் இராணுவம், கோர்க்கா நாட்டவர்களை காத்மாண்டு வரை அடித்து துரத்தினர். மேலும் கோர்க்கா நாடு, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கணிசமான தொகையை சீன நாட்டிற்கு திறையாக செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது. [10][11]

கோர்க்கா இராச்சியம் கிழக்கில் சிக்கிம் முதல் மேற்கில் கார்வால் மற்றும் குமாவான் மற்றும் சிர்மூர் இராச்சியம் வரை பரவியிருந்தது. கி பி 1814 முதல் 1816 முடிய நடைபெற்ற முதல் ஆங்கிலேயே-நேபாளப் போரில், கோர்க்கா நாட்டவர்கள் கைப்பற்றிய பெரும்பகுதிகள் ஆங்கிலேயேர்களிடம் இழந்தனர். [12][13]

கோர்க்கா நாடு - நேபாளம்

[தொகு]

கி பி 1930-இல் கோர்க்கா நாட்டின் பெயரை நேபாளம் என மாற்றப்பட்டது. நாட்டின் தலைநகராக காத்மாண்டு விளங்கியது.[14][15]கோர்க்கா சர்க்கார் என்பதை நேபாள அரசு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கி பி 1933-இல் கோர்க்காலி மொழியின் பெயர் நேபாள மொழி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [16]

கோர்க்கா நாட்டை நிறுவிய ஷா அரச குலத்தினர், முழு நேபாளத்தை 2008 முடிய ஆண்டனர். நேபாள மக்கள் புரட்சியின் விளைவாக, கி பி 2006-இல் நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு,[17] நேபாளம், ஜனநாயகக் குடியரசு நாடாக மாறியது.[18]தற்போது கோர்க்கா மாவட்டம், நேபாளத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது.

கோர்க்காக்களும் கூர்க்காக்களும்

[தொகு]
ஜப்பானில் கூர்க்கா படைவீர்ர்கள், ஆண்டு 1946

நேபாள மலை நாட்டவர்களான கூர்க்கா இன மக்களை, கோர்க்கா நாட்டு மக்களுடன் தொடர்புறுத்தி குழப்பிக் கொள்ளக்கூடாது. கூர்க்காக்கள் கிழக்கிந்திய இராணுவத்தில் ஒரு படைப்பிரிவினராக இருந்தனர். முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் கூர்க்காப் படையினர் ஆங்கிலேயேர்கள் சார்பாக போரிட்டனர். [19] தற்போதும் இந்தியத் தரைப்படையில் கூர்க்கா படைப்பிரிவு உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Hamilton, Francis Buchanan (1819). An Account of the Kingdom Of Nepal and of the Territories Annexed to This Dominion by the House of Gorkha. Edinburgh: Longman. பார்க்கப்பட்ட நாள் 12 January 2013. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help) Page 237.
 2. Kirkpatrick, Colonel (1811). An Account of the Kingdom of Nepaul. London: William Miller. பார்க்கப்பட்ட நாள் 12 January 2013. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help) Page 123.
 3. "OVERVIEW OF THE HISTORY OF THE SHAH DYNASTY". Archived from the original on 2005-02-22. பார்க்கப்பட்ட நாள் 2005-02-22.
 4. Messerschmidt, Don (April 2010). "Bringing Aid To Gorkha's Poor". ECS Nepal இம் மூலத்தில் இருந்து 15 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121215021723/http://www.ecs.com.np/feature_detail.php?f_id=20. பார்த்த நாள்: 11 January 2013. 
 5. Hamilton, Francis Buchanan (1819). An Account of the Kingdom Of Nepal and of the Territories Annexed to This Dominion by the House of Gorkha. Edinburgh: Longman. பார்க்கப்பட்ட நாள் 6 January 2013. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help) Page 7.
 6. Northey, William Brook and Morris, Charles John (1928). The Gurkhas: Nepal-Their Manners, Customs and Country. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120615779. Pages 30-31.
 7. Marshall, Julie G. (2005). "Gurkha Conquest of Nepal and the Kinloch and Logan Missions". Britain And Tibet 1765-1947. Routledge. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415336475.
 8. Hamilton, Francis Buchanan (1819). An Account of the Kingdom Of Nepal and of the Territories Annexed to This Dominion by the House of Gorkha. Edinburgh: Longman. பார்க்கப்பட்ட நாள் 15 January 2013. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help) Page 7.
 9. Marshall, Julie G. (2005). "Nepal 1788-1903". Britain And Tibet 1765-1947. Routledge. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415336475.
 10. Boulnois, L.. "Chinese Maps and Prints on the Tibet-Gorkha War of 1788-92". Kailash: p. 86. http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/kailash/pdf/kailash_15_0102_03.pdf. பார்த்த நாள்: 21 January 2013. 
 11. "The Enclosing of Nepal". U.S. Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 21 January 2013.
 12. Pradhan, Kumar (1991). The Gorkha conquests: the process and consequences of the unification of Nepal, with particular reference to eastern Nepal. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 6 February 2013.
 13. Jha, Pranab Kumar (1985). History of Sikkim, 1817-1904: Analysis of British Policy and Activities. O.P.S. Publishers. p. 11. அமேசான் தர அடையாள எண் B001OQE7EY.
 14. Planet, Lonely. "History of Nepal - Lonely Planet Travel Information". www.lonelyplanet.com. Archived from the original on 2017-09-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-08.
 15. Bindloss, Joseph (2010-09-15). Nepal 8 (in ஆங்கிலம்). Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781742203614.
 16. Lienhard, Siegfried (1992). Songs of Nepal: An Anthology of Nevar Folksongs and Hymns. New Delhi: Motilal Banarsidas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0963-7. Page 3.
 17. Nepal's Gorkha kingdom falls
 18. "Nepal's Gorkha kingdom falls". The Times of India. 2 June 2008 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411033226/http://articles.timesofindia.indiatimes.com/2008-06-02/rest-of-world/27770497_1_narayanhity-dipendra-prithvi-narayan-shah. பார்த்த நாள்: 11 February 2013. 
 19. Parker, John (2005). The Gurkhas: The Inside Story of the World's Most Feared Soldiers. Headline Book Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7553-1415-7.

வெளி இணைப்புகள்

[தொகு]

[பகுப்பு:இந்துப் பேரரசுகள்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்க்கா_நாடு&oldid=3961730" இலிருந்து மீள்விக்கப்பட்டது