செஞ்சி நாயக்கர்கள் (Nayaks of Gingee) தமிழ்நாட்டின்செஞ்சி நகரத்தை தலைநகராகக் கொண்டு கி பி 1508 முதல் 1649 முடிய ஆட்சி செய்தனர். முன்னர் விஜய நகரப் பேரரசின் செஞ்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை போன்ற பகுதிகளின் ஆளுநர்களாக விளங்கினர். துவக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் ஆறுவரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர் விஜய நகர பேர்ரசின் ஆரவீடு மரபினர் வேலூரை தலைமை இடமாக கொண்டு ஆளத் தொடங்கியதும். நெஞ்சி நாயக்கரின் ஆட்சி எல்லையானது வாட்டகே பாலாறு, தெற்கே கொள்ளிடம் ஆறு இவற்றுக்கு இடைபட்ட பகுதியில் சுருங்கியது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி புரிந்ததைப் போன்று செஞ்சி நாயக்கர் கிருஷ்ணப்ப நாயக்கர் 1509 முதல் தன்னாட்சியுடன் ஆட்சி செய்து வந்தார். பின்னர் இவரது வழித்தோன்றல்கள் செஞ்சியை கி பி 1649-இல் செஞ்சியை பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றும் வரை ஆண்டனர்.