உள்ளடக்கத்துக்குச் செல்

பலுசிஸ்தான் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலுசிஸ்தான் வரலாறு (history of Balochistan) புவியியல் படி பலுசிஸ்தான் நிலப்பரப்பை, பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் என்றும் ஈரான் நாட்டின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் என்றும் மற்றும் ஆப்கானித்தான் நாட்டின் பலுசிஸ்தான் என மூன்றாகப் பிரிப்பர். பலுசிஸ்தான் வரலாறு பழைய கற்காலத்திலிருந்து தொடங்குகிறது.

இசுலாமுக்கு முந்தைய வரலாறு[தொகு]

புதிய கற்காலத்தில் கிமு 7,000 - 5,500 வரை பலுசிஸ்தான் நிலப்பரப்புகளில் கற்களால் ஆன வேட்டைக் கருவிகளைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களின் தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்தனர்.[1] இவர்களின் குடியிருப்புகள் பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நடுவில் உள்ள போலன் மாவட்டத்தின் மெஹெர்கர் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது.

கிமு 2500ல் செப்புக் காலத்தில், பாகிஸ்தான் பகுதியின் பலுசிஸ்தான் நிலப்பரப்பு, சிந்துவெளி பண்பாட்டுக் களத்தின் மேற்கு விரிவாக்கப் பகுதியாக விளங்கியது.

கிமு 650ல் கிரேக்க வரலாற்று அறிஞரான எரோடோட்டசின் குறிப்புகளின் படி, பலுசிஸ்தான் பகுதிகளை பாரசீகர்கள் ஆண்டதாக குறிப்பிடுகிறார்.

கிமு முதல் நூற்றாண்டின் இறுதி முதல் கிபி நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பலுசிஸ்தான் பகுதிகள் இந்தோ-பார்த்தியப் பேரரசு மற்றும் இந்தோ பார்தியப் பேரரசால் ஆளப்பட்டது.

கிமு 322ல் பேரரசர் அலெக்சாந்தர் பலுசிஸ்தான் பகுதிகளை தனது பேரரசில் இணைத்தார்.[2]

பேரரசர் அலெக்சாந்தர் காலத்திய பேரரசில் பலுசிஸ்தான்

பலுசிஸ்தான் மீதான இசுலாமியப் படையெடுப்புகள்[தொகு]

இசுலாமிய மதம் பரப்புவதற்காக, கிபி ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை கைப்பற்றிய அரேபியர்கள் பலுசிஸ்தான் மீது படையெடுத்து, பலூச்சி மக்களை இசுலாமிற்கு மதம் மாற்றினர்.[3]

கிபி 644ல் கலிபா உமர் காலத்தில் அரேபியர்கள் பலுசிஸ்தானைக் கைப்பற்றி, இசுலாமை பரப்பினர்.[4]

கிபி 652ல் கலிபா உதுமான் காலத்தில் மீண்டும், தன்னாட்சி பெற்றிருந்த பலுசிஸ்தானை மீண்டும் கைப்பற்றினர். [5] கலிபா அலியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் பலுசிஸ்தான் தன்னாட்சி பெற்றது.

கிபி 660ல் ஹரிஸ் இப்னு மரா அப்டி தலைமையிலான படைகள், கடுமையான போரில் பலுசிஸ்தானைக் கைப்பற்றினர். கிபி பத்தாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள் ஆட்சி பலுசிஸ்தானில் அமைந்தது.

மத்திய காலம்[தொகு]

கஜானவித்து வம்சத்தின் பேரரசர் முகமது கசினியின் ஆட்சிக் காலத்தில் பலுசிஸ்தானைக் கைப்பற்றினார். பின்னர் இதனை குரியத்து அரச மரபினர் ஆண்ட பின் குவாரசமிய அரச மரபினர் கிபி 1231 வரை ஆண்டனர். கிபி 13ம் நூற்றாண்டில் செங்கிஸ் கானின் மங்கோலியப் பேரரசில் இருந்த பலுசிஸ்தான், 14ம் நூற்றாண்டில் தைமூர் பேரரசில் சென்றது. கிபி 15ம் நூற்றாண்டு முதல் முகலாயப் பேரரசில் ஒரு பகுதியாக பலுசிஸ்தான் இருந்தது.

கிபி 17-ஆம் நூற்றாண்டில் முதல் 1948 முடிய பலுசிஸ்தான், பிரித்தானிய இந்தியா அரசின் கீழ் ஒரு சமஸ்தானமாக விளங்கியது.

1947ல் நடைபெற்ற இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பலூசிஸ்தான் பகுதி, 1947 முதல் பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணமாக உள்ளது.

பலுசிஸ்தான் பிணக்குகள்[தொகு]

முதல் பிணக்கு[தொகு]

1948 பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டப்படி, பலுசிஸ்தான் மன்னராட்சிப் பகுதி, பாகிஸ்தான் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. இதனை எதிர்த்து சூலை 1948ல் பலுசிஸ்தான் இளவரசரின் படைகள் துப்பாக்கிகள் ஏந்தி, பாகிஸ்தானிய அரசுப் படைகளுக்கு எதிராக 1950ம் ஆண்டு வரை கலகம் செய்தனர்.[6] பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னாவும், அவருக்குப் பின் வந்தவர்களும், பலுசிஸ்தான் சமஸ்தானத்தை 1955ல் கலைக்கும் வரை விட்டு வைத்தனர்.

இரண்டாம் பிணக்கு[தொகு]

பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்திய ஒரு நாட்டுக் கோட்பாட்டினால், பலுசிஸ்தான் பழங்குடி மக்களுக்கு மைய அரசில் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்காத காரணத்தினால், நவாப் நௌரோஸ் கான் குழுவினர், பாகிஸ்தான் அரசுப் படைகளுக்கு எதிராக 1958 முதல் 1959 முடிய ஆயுதமேந்தி கொரில்லாப் போரில் ஈடுபட்டனர். இறுதியாக நவாப் நௌரோஸ் கான் குழுவினரை சிறை பிடித்து தூக்கிலிட்டு, பலுசிஸ்தானியர்களின் கிளர்ச்சியை அடக்கினர்.[7] Nawab Nauroz Khan fought a lone battle as the rest of Balochistan did not support the uprising.[8]

மூன்றாம் பிணக்கு[தொகு]

1960களில் தனி பலுசிஸ்தான் நாடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் வெடித்தது. பாகிஸ்தான் அரசுப்படைகளுக்கு எதிராக 1963 முதல் 1969 முடிய கொரில்லாப் போர் நடைபெற்றது. பலுசிஸ்தானியர்களின் தொடர் எதிர்ப்பின் காரணமாக, 1970ல் பாகிஸ்தான் அதிபர் யாகியா கான் ஒரே நாடு, ஒரே அரசு என்ற ஒரு அலகு கோட்பாட்டை கைவிட்டு [9], பலுசிஸ்தானை பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக அங்கீகரிப்பட்டதுடன், அனைத்து மாகாணங்களுக்கும், மைய அரசின் அதிகாரங்களைப் பிரித்து வழங்கினார்.

நான்காம் பிணக்கு 1973–77[தொகு]

1973ல் பாகிஸ்தான் அதிபராக இருந்த சுல்பிக்கார் அலி பூட்டோ, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாண அரசுகளை கலைத்து இராணுவ ஆட்சியை கொண்டு வந்தார்.[10] இதனால் தனி நாடு கோரி, மீர் அசர் கான் ராம்கனி தலைமையில் பலுசி ஸ்தான் மக்கள் விடுதலைப் படை என்ற ஆயுதமேந்திய அமைப்பு தோன்றிது.[11] பலுசிஸ்தான் கொரில்லாப்படைகளுக்கும், ஈரான் உதவியுடன் கூடிய பாகிஸ்தானிய இராணுவத்திற்கு இடையே நடைபெற்ற மோதல்களில், பாகிஸ்தான் இராணுவ வீரர்களில் 300 - 400 வரையும், பலுசிஸ்தான் கொரில்லா வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 7,300 - 9,000 வரை கொல்லப்பட்டனர்.[12]

ஐந்தாம் பிணக்கு 2004 - தற்போது வரை[தொகு]

2004ல் பலுசிஸ்தான் தனி நாடு கோரும் புரட்சிப் படையினரால், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டுக் கொண்டிருந்த குவாதார் துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், நான்கு பேர் காயமடைந்தனர்.[13] 2005ல் பலுசிஸ்தான் அரசியல் தலைவர்கள் நவாப் அக்பர் கான் புக்தி மற்றும் மீர் பாலச் மர்ரி ஆகியோர் பாகிஸ்தான் அரசுக்கு 15 அம்ச கோரிக்கையை அனுப்பினர்.

15 அம்ச கோரிக்கையின் முக்கியமானது, பலுசிஸ்தானில் கிடைக்கும் கனிம வள வருவாயில் கனிசமான பங்கு பலுசிஸ்தான் மாகாண அரசுக்கு வழங்குதல் மற்றும் பலுசிஸ்தானில் உள்ள இராணுவ கட்டமைப்புகளுக்காக, பலுசிஸ்தான் மாகாணத்திற்கு பெருந்தொகை வழங்க ஈட்டுத்தொகையாக வேண்டும் என்பதே.[14] 15 டிசம்பர் 2005ல் பலுசிஸ்தானுக்கு ஹெலிகாப்டரில் சென்ற பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்புப் படையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை, பலுசிஸ்தான் புரட்சிபடையினர் சுட்டுக் காயப்படுத்தினர்.[15]

ஆகஸ்டு 2006ல் புரட்சிப்படைத் தலைவர் நவாப் அக்பர் கானை பிடிக்க வந்த, இராணவ வீரர்களில் 60 பேர் மற்றும் 7 இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப்பின் கட்டளையால் பலுசிஸ்தான் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது. குண்டு வீச்சில் பலுசிஸ்தான் விடுதலைப் படைத் தலைவர் நவாப் அக்பர் கான் கொல்லப்பட்டார்.[16]

3 ஏப்ரல் 2009ல் பலூசிஸ்தான் தேசிய இயக்கத் தலைவர் குலாம் முகமது பலூச் மற்றும் அதன் இரண்டு துணைத் தலைவர்களையும், கை விலங்கிட்டு, கண்களை துணியால் மூடி சரக்கு வாகானத்தில் அடையாளம் தெரியாதவர்களால் தூக்கிச் செல்லப்பட்டனர்.

ஐந்து நாள் கழித்து 8 ஏப்ரல் 2009ல் கடைவீதியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த மூவரின் உயிரற்ற சடலங்கள் கடைவீதியில் கண்டெடுக்கப்பட்டது.[17] இதனால் பலுசிஸ்தான் மாகாணம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.[18]

12 ஆகஸ்டு 2009ல் பலுசிஸ்தானின் முன்னாள் கலாத் சமஸ்தானத்தின் மன்னர் மீர் சுலைமான் தாவூது கான் தன்னை பலுசிஸ்தான் நாட்டின் மன்னராக அறிவித்துக் கொண்டதுடன், ஒரு அமைச்சரவையையும் நியமித்துக் கொண்டார்.

பலுசிஸ்தானில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் 37% மக்கள் தனி பலுசிஸ்தான் நாடு கோரிக்கைக்கு வாக்களித்தனர்.[19]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Iain Morley; Colin Renfrew (2010). The Archaeology of Measurement: Comprehending Heaven, Earth and Time in Ancient Societies. Cambridge University Press. p. 107.
 2. Tandon, Pankaj. "New light on the Paratarajas" (PDF). pp. 29–30.
 3. Dashti, Naseer (2012). The Baloch and Balochistan: A Historical Account from the Beginning to the Fall of the Baloch State. Trafford Publishing. pp. 63–67.
 4. "Imperial Gazetteer2 of India, Volume 6, page 275 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library". dsal.uchicago.edu.
 5. Fatu al Buldan page no:384
 6. Qaiser Butt (22 April 2013). "Princely Liaisons: The Khan family controls politics in Kalat". The Express Tribune. http://tribune.com.pk/story/538820/princely-liaisons-the-khan-family-controls-politics-in-kalat/. 
 7. Harrison, Selig S. (1981). In Afghanistan's shadow: Baluch nationalism and Soviet temptations. Carnegie Endowment for International Peace. pp. 27–28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87003-029-1.
 8. Siddiqi, The Politics of Ethnicity in Pakistan 2012, ப. 71.
 9. "Asia Report No. 119". Pakistan: The Worsening Conflict in Balochistan. International Crisis Group. 14 September 2006. p. 4.
 10. Jalal, Ayesha (2007). The State of Martial Rule: The Origins of Pakistan's Political Economy of Defence. Cambridge University Press.
 11. Abbas, Hassan (2005). Pakistan's Drift Into Extremism: Allah, the Army, and America's War on Terror. M.E. Sharpe. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7656-1496-0.
 12. "Minor Atrocities of the Twentieth Century". Users.erols.com. பார்க்கப்பட்ட நாள் 14 October 2014.
 13. Tahir, Muhammad (3 April 2008). "Tribes and Rebels: The Players in the Balochistan Insurgency". Jamestown. Archived from the original on 16 December 2014.
 14. "In Remote Pakistan Province, a Civil War Festers". The New York Times. 2 April 2006. https://www.nytimes.com/2006/04/02/world/asia/02pakistan.html. 
 15. "Pakistan general hurt in attack". BBC News. 15 December 2005. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4531546.stm. 
 16. "Tribal Leader's Killing Incites Riots in Pakistan". The New York Times. 28 August 2006. https://www.nytimes.com/2006/08/28/world/asia/28pakistan.html. 
 17. Carlotta Gall (11 July 2009). "Another Insurgency Gains in Pakistan". The New York Times. https://www.nytimes.com/2009/07/12/world/asia/12baluchistan.html?ref=world. 
 18. "Riots as Baloch chiefs found dead". BBC News. 9 April 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7991385.stm. 
 19. "37pc Baloch favour independence: UK survey". The News International. 13 August 2012 இம் மூலத்தில் இருந்து 15 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170215072843/https://www.thenews.com.pk/archive/print/624446-37pc-baloch-favour-independence-uk-survey. 

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலுசிஸ்தான்_வரலாறு&oldid=3746344" இலிருந்து மீள்விக்கப்பட்டது