ஹர்சப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்சப் பேரரசு
606–647
உச்சகட்டத்தின் போது ஹர்சப் பேரரசின் வரைபடம்
உச்சகட்டத்தின் போது ஹர்சப் பேரரசின் வரைபடம்
தலைநகரம்கன்னோசி
சமயம்
பௌத்தம்
இந்து சமயம்
சமணம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 606–647
ஹர்ஷவர்தனர்
வரலாற்று சகாப்தம்பண்டைய இந்தியா
• தொடக்கம்
606
• முடிவு
647
புத்தரின் நினைவைப் போற்றும் ஹர்சர்

ஹர்ஷவர்தனர் நிறுவிய ஹர்சப் பேரரசு, பண்டைய பரத கண்டத்தின் கன்னோசியை தலைநகராகக் கொண்டு கி பி 606 முதல் 647 முடிய வட இந்தியாவில் குறுகிய காலம் ஆட்சி செலுத்தியது. குறுகிய கால பேரரசாக இருப்பினும் அமைதியும், வளமையும் நிலவிய பேரரசை பல்துறை அறிஞர்களையும், கலைஞர்களையும், புனித யாத்ரீகர்களையும் கவர்ந்தது. சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் ஹர்சப் பேரரசின் பௌத்த யாத்திரைத் தலங்களுக்கு வருகை புரிந்தார்.

பின்னணி[தொகு]

மாளவ மன்னன் தேவகுப்தன் ஹர்சரின் சகோதரியான ராஜ்யஸ்ரீயின் கணவரை கொன்றுவிட்டு ராஜ்யஸ்ரீயை தன்னோடு அழைத்துச் சென்று சிறை வைத்தான்

அதை அறிந்த ஹர்ஷவர்தனர் மற்றும் ராஜ்ஜியஸ்ரீயின் அண்ணனான ராஜ்யவர்த்தனர் தேவகுப்தன் மீது போர் தொடுத்து வெற்றியும் பெற்றான். அதன் பின் சூழ்ச்சியால் ராஜ்யவர்தனர் கௌடப் பேரரசர் சசாங்கனால் கொல்லப்பட்டான்

அப்போது ஹர்சருக்கு வயது பதினாரே நிரம்பிய நிலையில் ஹர்சவர்த்தனராக முடிசூட்டிக் கொண்டார்; ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சசாங்கனை பழிதீர்த்து, தன் சகோதரி ராஜ்யஸ்ரீயையும் மீட்டார்.[1][2]

பேரரசின் பரப்பு[தொகு]

ஹர்சப் பேரரசின் பரப்பு வட இந்தியாவில், மேற்கே குஜராத் முதல் கிழக்கே வங்காளம் வரையிலும், வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே மாளவம் வரையிலும் பரவியிருந்தது.

படை பலம்[தொகு]

ஹர்சப் பேரரசின் படையில் துவக்கத்தில் 5,000 யாணைகளும், 20,000 குதிரை வீரர்களும், 50,000 தரைப்படைவீரர்களும் இருந்தனர். பின்னர் ஹர்சரின் படையில் 1,00,000 குதிரைப்படைவீரர்களும், 60,000 யாணைப் படைவீரர்களும் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது.

போர்கள்[தொகு]

618 - 619-இல் தென்னிந்தியாவின் சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் புலிகேசியுடன், நர்மதை ஆற்றின் கரையில் நடந்த போரில் ஹர்சர் தோல்வி அடைந்தார்.[3][4][5]

பௌத்தத்தின் புரவலர்[தொகு]

ஹர்சர் பௌத்த சமயம் மற்றும் பௌத்த சாத்திரங்களை போற்றினாலும், இந்து சமயம் மற்றும் சமண சமயங்களையும் ஆதரித்தார்.[6]

ஹர்சப் பேரரசில் சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் கி பி 636-இல் வருகை புரிந்தார். அவரது கூற்று படி, ஹர்சவர்தனர் நாளந்தா பல்கலைகழகத்திற்கு பெரும் நிதியுதவிகள் செய்து புரந்தார் எனத் தெரிகிறது.

643-இல் ஹர்சப் பேரரசின் தலைநகரான கன்னோசியில் நடைபெற்ற பௌத்த அறிஞர்கள் மாநாட்டில் இருபது மன்னர்களும், ஆயிரக்கணக்கான புத்த பிக்குகளும் கலந்து கொண்டனர்.[7]

வீழ்ச்சி[தொகு]

கி பி 647-இல் தமது 41-வது வயதில் ஹர்சவர்தனர் இறந்தார். அவரின் இறப்புடன் ஹர்சப் பேரரசும் ஹூணர்களால் வீழ்ந்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sengupta, Nitish K. (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib. Penguin Books India. பக். 34–35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14341-678-4. https://books.google.com/books?id=kVSh_TyJ0YoC&pg=PA34. 
  2. Roy, Kaushik (2013). "Bana". in Coetzee, Daniel; Eysturlid, Lee W.. Philosophers of War: The Evolution of History's Greatest Military Thinkers. ABC-CLIO. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-07033-4. https://books.google.com/books?id=DW2jAQAAQBAJ&pg=PA21. 
  3. The Hindu, 25 April 2016, p. 9: "Pulakeshin's victory over Harsha was in 618 AD"
  4. the Times of India", Pune, 23 April 2016, p. 3: Study unravels nuances of classical Indian history
  5. The Early History of India by Vincent A. Smith pp. 339-340
  6. Drekmeier, Charles. 1962. Kingship and Community in Early India. nalanda University Press, Stanford, California. ISBN 0-8047-0114-8, p. 187
  7. Watters, Thomas. On Yuan Chwang's Travels in India. Two volumes. 1904–1905, Royal Asiatic Society, London. One volume reprint: Munshiram Manoharlal, Delhi, 1973, pp. 343–344.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்சப்_பேரரசு&oldid=3908898" இலிருந்து மீள்விக்கப்பட்டது