உள்ளடக்கத்துக்குச் செல்

கார்வால் நாடு

ஆள்கூறுகள்: 30°23′N 78°29′E / 30.38°N 78.48°E / 30.38; 78.48
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்வால் அரசு
தெக்ரி கார்வால்
கார்வால் நாடு
பொ.ஊ. 888–1949
கொடி of கார்வால் இராச்சியம்
கொடி
பிரித்தானிய இந்திய அரசின் ஐக்கிய மாகாணத்தில் கார்வால் சுதேச சமஸ்தானத்தின் வரைபடம்,
பிரித்தானிய இந்திய அரசின் ஐக்கிய மாகாணத்தில் கார்வால் சுதேச சமஸ்தானத்தின் வரைபடம்,
தலைநகரம்தேவல்கார் பொ.ஊ. 1500-1519
ஸ்ரீநகர், உத்தரகண்ட் 1519-1804
தெஹ்ரி 1815-1862
பிரதாப்நகர் 1862-1890
கீர்த்திநகர் 1890-1925
நரேந்திரநகர் 1925-1949
பேசப்படும் மொழிகள்கார்வாலி
சமஸ்கிருதம்
இந்தி
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
சுதேச சமஸ்தானம் (1815–1949)
கார்வால் மஹாராஜா 
வரலாறு 
• தொடக்கம்
பொ.ஊ. 888
• முடிவு
1949
முந்தையது
பின்னையது
தன்னாட்சியாளர்கள்
Union of India
தற்போதைய பகுதிகள்உத்தரகண்ட், இந்தியா

கார்வால் நாடு (Garhwal Kingdom or Tehri Garhwal) (இந்தி: गढ़वाल राज्य) இந்தியாவின் வடக்கில் இமயமலை பகுதியில், சிவாலிக் மலைத் தொடரில், உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்த கார்வால் இராச்சியத்தை இராஜபுத்திர குலத்தவர்கள் ஆண்ட அரசாகும். கார்வால் நாடு பொ.ஊ. 888-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசிற்கு கப்பம் செலுத்தும் சுதேச சமஸ்தானமாக 1815 முதல் ஆகஸ்டு, 1949 முடிய விளங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசுடன் இணைந்தது.

கார்வால் நாடு, தற்கால உத்தரகண்ட் மாநிலத்தின் டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் உத்தரகாசி மாவட்டம் எனும் இரண்டு மாவட்டங்களைக் கொண்டது.

வரலாறு[தொகு]

மால்வாவின் இளவரசன் கணக்பால் இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்கு சென்ற போது, அங்கிருந்த சந்தரப்பூர் கார்கியின் மலையரசன் பானுபிரதாப்பின் மகளை திருமணம் செய்து கொண்டதன் மூலம் சந்திரப்பூர் கார்கி பகுதியின் மன்னரானார். பின்னர் 52 குறுநில மன்னர்களை வென்று கார்வால் இராச்சியத்தை பொ.ஊ. 823-இல் நிறுவினார்.[1]

பொ.ஊ. 1901-இல் கார்வால் இராச்சியம் 4180 சதுர கிலோ மீட்டர் பரப்பள்வில் 2,68,885 மக்கள் தொகையுடன் விளங்கியது. 1815-முதல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு கப்பல் செலுத்தி நாட்டை ஆண்டனர். பின்னர் 1859 முதல் 1947 முடிய பிரித்ததானியாவின் இந்திய அரசில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது.

இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949-ஆம் ஆண்டில் கார்வால் நாடு இந்திய அரசில் இணைந்தது.

முக்கிய ஆட்சியாளர்கள்[தொகு]

 • அஜய்பால் பொ.ஊ. 1358
 • பாலபத்திர ஷா (1575–1591)
 • மகிபத் ஷா
 • இராணி கர்ணாவதி
 • பிரிதிவி ஷா
 • பதே ஷா
 • பிரதீப் ஷா
 • பிதியும்மன் ஷா
 • சுதர்ஷன் ஷா
 • பவானி ஷா
 • நரேந்திர ஷா

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. [1] Tehri Garhwal official website.
 • The History of a Himalayan princely state: Change, conflicts, and awakening : an interpretative history of Princely State of Tehri Garhwal, U.P., A.D. 1815 to 1949 A.D., by Atul Saklani. Delhi : Durga Publications, 1987.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்வால்_நாடு&oldid=3961889" இலிருந்து மீள்விக்கப்பட்டது