பொலன்னறுவை இராச்சியம்
பொலன்னறுவை இராச்சியம் Kingdom of Polonnaruwa පොළොන්නරුව රාජධානිය பொலன்னறுவை இராச்சியம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1055–1232 | |||||||||||
தலைநகரம் | விஜயராஜபுரம் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | சிங்களம் சமசுகிருதம்[1] | ||||||||||
ஏனைய மொழிகள் | கெமர் | ||||||||||
சமயம் | பௌத்தம் இந்து சமயம்[2] | ||||||||||
மக்கள் | சிங்களம்: පොළොන්නරු | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
ஆட்சியாளர் | |||||||||||
• 1055-1111 | முதலாம் விஜயபாகு | ||||||||||
• 1153-1186 | முதலாம் பராக்கிரமபாகு | ||||||||||
• 1187-1196 | நிசங்க மல்லன் | ||||||||||
• 1215-1232 | கலிங்க மாகன் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | பொலன்னறுவை காலம் | ||||||||||
• தொடக்கம் | 1055 | ||||||||||
• முடிவு | 1232 | ||||||||||
நாணயம் | காசுகள் | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | இலங்கை இந்தியா |
பொலன்னறுவை இராச்சியம் (Polonnaruwa Kingdom) அல்லது பொலன்னறுவை இராசதானி (சிங்களம்: පොළොන්නරුව රාජධානිය) என்பது அனுராதபுர இராச்சியம் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. பின்னர் சிங்கள மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இலங்கை நீர்வள நாகரிகத்தின் பொற்காலமாக இதனைக் குறிப்பிடலாம்.
வரலாறு
[தொகு]அநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மகிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராசேந்திர சோழன் என்ற சோழ மன்னனால் இராசரட்டை கைப்பற்றப்பட்டது, பின் அப்பகுதி சோழப்பேரரசின் பகுதியாகியதுடன் அது 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப்பெயரிடப்பட்டது. பின்னர் இராஜ ராஜ சோழனால் உருகுணையில் ஐந்தாம் மகிந்தன் பிடிபட்டு சோழ நாட்டிற்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டான். சோழர்களால், மகாவலி கங்கையால் சூழப்பட்ட பொலன்னறுவை தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது. பொலன்னறுவை சோழர்களால் ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்டது. சோழர்கள் 52 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனாவான். இவன் விகாரைகள் பலவற்றை அமைத்தான். இவ்வரசன் பாண்டியர்களோடு திருமண ஒப்பந்தங்களைச் செய்தான்.
முதலாம் பராக்கிரமபாகு (கி.பி.1153 தொடக்கம் கி.பி.1186)
[தொகு]பொலன்னறுவையின் முதன்மையான ஆட்சியாளன் ஆவான். பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டிய பெருமை இவனையே சாரும்.
ஏனைய ஆட்சியாளர்கள்
[தொகு]முதலாம் பராக்கிரமபாகுவின் பின் நிசங்கமல்லன் ஆட்சி செய்தான். பின்னர் சில பலமற்ற அரசர்களும் அரசிகளும் ஆட்சி செய்தார்கள்.
வீழ்ச்சி
[தொகு]கலிங்க மாகன் உடைய படையெடுப்புடன் பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றது. இவன் கி.பி.1215 இல் பலம்வாய்ந்த ஏறக்குறைய 24000 பேரினைக்கொண்ட கேரளப்படையை கொண்டு இலங்கையை ஆக்கிரமித்தான்.
கலை மற்றும் பண்பாடு
[தொகு]கலைகள் அதிகம் வளர்ச்சியடைந்த காலமாக இதனைக் குறிப்பிட முடியும். பொலன்னறுவை காலக் கட்டடங்கள் இதனைப் பறைசாற்றுகின்றன. பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இந்து மதத்தின் செல்வாக்கை அறியலாம். அனுராதபுர சந்திரவட்டக்கல்லில் காணப்பட்ட எருது வடிவம் பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இருந்து நீக்கப்பட்டமை இதற்கு ஆதாரமாகும்.
மதங்கள்
[தொகு]பௌத்த மதமே பிரதானமான மதமாகும். எனினும் சோழர் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இந்து மதம் நன்றாகப் பரவியது. பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த முதலாம் பராக்கிரமபாகு மன்னன் முதலியோர் பௌத்த மதத்தில் நிலவிய பிரிவினைகளை ஒழித்தனர். இதன் மூலம் பௌத்த மதம் வளர்ச்சியுற்றது. இலங்கை மக்களின் கலாச்சாரத்தில் பெளத்த மதம் பின்னிப்பிணைந்து காணப்பட்டது.
பொருளாதார நிலமை
[தொகு]விவசாயம்
[தொகு]கைத்தொழில்
[தொகு]உலோகக் கைத்தொழில் உயர்மட்டதில் காணப்பட்டது, போர்ப்படைக்குத்தேவையான கருவிகள், சிலைகள் என்பன உருவாக்கப்பட்டன. வீடு கட்ட செங்கல்லையும் மரத்தையும் பயன்படுத்தினர். புடவை, சுரங்கக் கைத்தொழில்களும் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.[3]
கல்வி
[தொகு]அரச பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் இம்மாவட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கின்றன.
[தொகு]காட்சியகம்
[தொகு]-
பொலன்னறுவை வேலைக்கார கல்வெட்டின் தமிழ் எழுத்துக்கள்
-
கல் விகாரை புத்தர் சிலை
-
பராக்கிரமபாகுவின் சிலை
-
ஏழடுக்கு சத்மல் பிரஸாதய கட்டிடம்
-
பராக்கிரம சமுத்திரம்
-
பராக்கிரமபாகுவின் மாளிகை
-
பொலன்னறுவைச் சிவன் கோவில்களுள் ஒன்றிலுள்ள சிவலிங்கம்