கம்பளை
கம்பளை | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
அமைவிடம் | 7°09′53″N 80°34′36″E / 7.1647°N 80.5767°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 567 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை (2001) - நகரம் (2001) |
86136 - 24283 |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 20500 - + - CP |
கம்பளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரசபை ஆகும். கம்பளை நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் தோட்டப்புறப் பகுதிகள் உடாபலாத்தை பிரதேச சபையால் ஆட்சி செய்யப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக உடாபலாத்தை பிரதேச செயலர் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்டத் தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கை இந்நகரின் உடாகப் பாய்கிறது. இலங்கையின் பண்டைய இராசதானிகளில் ஒன்றான கம்பளை இராசதானி இந்நகரை மையமாகக் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது.
புவியியலும் காலநிலையும்
[தொகு]கம்பளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 567 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 3000-3500 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
[தொகு]இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 86136 | 48401 | 6415 | 13523 | 17359 | 87 | 351 |
நகரம் | 24283 | 10359 | 1962 | 1268 | 10441 | 53 | 184 |
கிராமம் | 48087 | 36219 | 2394 | 2408 | 6885 | 32 | 125 |
தோட்டப்புறம் | 13766 | 1823 | 2059 | 9847 | 33 | 2 | 4 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 86136 | 47640 | 18131 | 17896 | 1690 | 769 | 10 |
நகரம் | 24283 | 10081 | 2801 | 10654 | 552 | 194 | 1 |
கிராமம் | 48087 | 35800 | 4045 | 7189 | 613 | 433 | 7 |
தோட்டப்புறம் | 13766 | 1759 | 11285 | 53 | 525 | 142 | 2 |
கைத்தொழில்
[தொகு]இலங்கையின் தேயிலை பெருந்தொட்டங்கள் பெருவாரியாக அமைந்துள்ள பகுதிகளுக்கான பிரதான அணுகு பாதையில் மைந்துள்ளப்படியால் இங்கு தேயிலை சார்ந்த வணிகம் முக்கிய இடத்தை பெறுகிறது. நெற்பயிர்ச் செய்கை சிறிய அளவில் நடைபெற்றாலும் , மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது.
அரசியல்
[தொகு]2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: கம்பளை நகரசபை
கட்சி | வாக்குகள் | சதவீதம் | ஆசனங்கள் |
ஐக்கிய தேசியக் கட்சி | 8,548 | 57.91 | 9 |
ஜாதிக ஹெல உருமய | 5,492 | 37.20 | 5 |
மக்கள் விடுதலை முன்னணி | 722 | 4.89 | 1 |
செல்லுபடியான வாக்குக்கள் | 14762 | 94.22% | - |
நிராகரிக்கப்பட்டவை | 905 | 5.78% | - |
அளிக்கப்பட்ட வாக்குகள் | 15667 | 61.5% | - |
மொத்த வாக்காளர்கள் | 25475 | ** | - |
மூலம்:[1]
குறிப்புகள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை |