நாவலப்பிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

7°3′18″N 80°32′9″E / 7.05500°N 80.53583°E / 7.05500; 80.53583

நாவலப்பிட்டி

நாவலப்பிட்டி
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°03′18″N 80°31′59″E / 7.055°N 80.533°E / 7.055; 80.533
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 602 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 20650
 - +9454
 - CP


நாவலப்பிட்டி இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். நாவப்பிட்டி நகரம் நகரசபையாளும் நகரைச் சூழவுள்ள பகுதிகள் பஸ்பாகே கோரளை பிரதேச சபையால் ஆட்சி செய்யப்படுகிறது. நகரசபையும் பிரதேச சபையும் கூட்டாக பஸ்பாகே கோரளை பிரதேச செயளர் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. நாவலப்பிட்டி மாவட்ட தலைநகரான கண்டியிலிருந்து 38 கி.மீ. தெற்கே அமைந்துள்ளது. பாரிய தேயிலைத் தோட்டங்கள் இந்நகரைச் சூழ காணப்படுகின்றது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கை இந்நகரின் ஊடாகப் பாய்கிறது. மகாவலியின் பிரதான கிளையாறான கொத்மலை ஓயா நகருக்கு தெற்கில் பிரதான ஆற்றோடு சங்கமிக்கிறது.

புவியியலும் காலநிலையும்[தொகு]

நகரம் இலங்கையின் மத்திய மலைநாட்டின் தென் மேல் சாய்வில் அமைந்துள்ளது. சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 602 மீற்றர்களாகும். இப்பகுதி மிக சாய்வான மலைகளைக் கொண்டுள்ளது குறைந்த தூரத்தில் பாரிய உயர வேற்றுமகளைக் காணலாம். 930 மீற்றர் உயரமான தொலொஸ்பாகை மலைத்தொடர்கள் நகருக்கு அண்மையில் காணப்படுகின்றன. இலங்கையின் மிக நீளமான நதியான மகாவலி கங்கை இந்நகரின் ஊடாகப் பாய்கிறது. நகரின் வருடாந்த மழைவீழ்ச்சி சுமார் 2500 மி.மீ. ஆகும். இது மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையான காலப்பகுதியில் வீசும் தென்மேற்கு பருவக் காற்றினால் கிடைக்கிறது. சராசரி வெப்பநிலை 28 பாகை செல்சியஸ் ஆகும். மிகக் குறைந்த வெப்பநிலையான 15 பாகை செல்சியஸ் ஜனவரி மாதத்தில் உணரப்படும்.

போக்குவரத்து[தொகு]

நாவலப்பிட்டியை பெருந்தெரு மற்றும் தொடருந்து வழியாக அணுகலாம். கண்டி நகரில் இருந்து ஏஏ-1 பெருந்தெருவில் பேராதனை வரை பயணம் செய்து அங்கிருந்து ஏஏ-5 பெருந்தெருவில் கம்பளை வரை சென்று அங்கிருந்து ஏபி-13 பெருந்தெருவூடாக நாவலப்பிட்டியை அடையலாம். மாற்றாக இலங்கை தொடருந்து திணைக்களத்தின் மலையக பாதையின் மூலமாகவும் அடையலாம். நாவப்பிட்டியை திம்புளைக்கு பி-317, தொலொஸ்பாகைக்கு பி-318, கினிகத்தனைக்கு பி-319 மற்றும் அரங்கலைக்கு பி-506 என்ற பி தர பெருந்தெருக்கள் இணைக்கின்றன.

மக்கள்[தொகு]

நாவலப்பிட்டி ஒரு பல்கலாச்சார பல்சமய நகரமாகும். இது சிங்களவரை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 56934 26030 2358 20210 7807 169 360
நகரம் 13533 4627 1889 2198 4512 111 144
கிராமம் 26907 20000 300 3177 3230 54 155
தோட்டப்புறம் 16494 1403 169 14835 65 4 30

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 56934 25550 19626 8158 2767 790 43
நகரம் 13533 4435 3524 4683 686 198 7
கிராமம் 26907 19740 2704 3380 825 234 24
தோட்டப்புறம் 16494 1375 13398 95 1256 358 12

வரலாறு[தொகு]

பிரித்தானியர் வருகையின் போது இந்நகர் ஒரு சிறிய கிராமமாகவே காணப்பட்டது. அவர்களின் ஆட்சியின் போது நகரைச் சூழவுள்ள பிரதேசத்தில் இரப்பர், கோப்பித் தோட்டங்கள் செய்யப்பட்டன. அவை ஒருவித நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தேயிலை இப்பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக இந்தியாவின் அப்போதைய மெட்றாஸ் மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் இப்பிரதேசத்தில் குடியேற்றப்பட்டனர். இன்றும் இவர்களது சந்ததியினர் குறிப்பிடத்தக்களவு பெரும்பான்மையுடன் நாவலப்பிட்டியில் வசிக்கின்றனர். 1874 ஆம் ஆண்டு தேயிலைத் தோட்டங்களிலிருந்து கொழும்புக்கு தேயிலையை கொண்டு செல்வதை இலகுவாக்கும் நோக்கில் நாவலப்பிட்டிக்கு தொடருந்து பாதையை அமைத்தார்கள். இந்நகரைச்சுற்றி வேறு இயற்கை வளங்கள் காணப்படாத நிலையில் நகரின் வளர்ச்சி இரயிலையும் அதனுடன் தொடர்புடைய சேவைகளையும் அண்டியே நடைபெற்றது. காலப்போக்கில் இரயிலின் முக்கியத்துவம் குன்றிப்போனாலும் நகரின் வளர்ச்சி பாரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

அரசியல்[தொகு]

நகரசபை 9 ஆசங்களையும் பிரதேச சபை 11 ஆசங்களையும் கொண்டதாகும். 2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: நாவலப்பிட்டி நகரசபை

கட்சி வாக்குகள் சதவீதம் ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3,626 66.34 7
ஐக்கிய தேசியக் கட்சி 1,535 28.08 2
மக்கள் விடுதலை முன்னணி 305 5.58 -
செல்லுபடியான வாக்குக்கள் 5466 95.66% -
நிராகரிக்கப்பட்டவை 248 4.34% -
அளிக்கப்பட்ட வாக்குகள் 5714 66.33% -
மொத்த வாக்காளர்கள் 8615 ** -

மூலம்:[1]

2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: பஸ்பாகே கோரளை பிரதேசசபை

கட்சி வாக்குகள் சதவீதம் ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10,525 64.31 8
ஐக்கிய தேசியக் கட்சி 4,164 25.44 2
மக்கள் விடுதலை முன்னணி 1,330 8.13 1
சுயேட்சை 348 2.13 -
செல்லுபடியான வாக்குக்கள் 16367 91.69% -
நிராகரிக்கப்பட்டவை 1484 8.31% -
அளிக்கப்பட்ட வாக்குகள் 17851 63.01% -
மொத்த வாக்காளர்கள் 28332 ** -

மூலம்:[2]

பிரச்சினைகள்[தொகு]

நகரில் அவ்வப்போது ஏற்பட்ட இனக்கலவரங்களும், அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படும் இயற்கை அழிவுகளும் இந்நகரம் எதிநோக்கும் பிரச்சினைகளாகும்.

சுற்றுலாத் தளங்கள்/ பார்க்க வேண்டியவை[தொகு]

  • கெட்டபுலா நீர்வீழ்ச்சி
  • தொலொஸ்பாகே மலை
  • கலபடை நீர்வீழ்ச்சிகள்

பிரபலமானவர்கள்[தொகு]

பிரபல பாடசாலைகள்[தொகு]

  • கதிரேசன் மத்திய கல்லூரி (தமிழ்)
  • புனித அந்திரேயர் பெண்கள் கல்லூரி (தமிழ்/சிங்களம்)
  • புனித மரியாள் முஸ்லிம் வித்தியாலயம் (தமிழ்/சிங்களம்)
  • அனுருத்த மத்திய கல்லூரி (சிங்களம்)
  • நாவலப்பிட்டி மத்திய கல்லூரி (சிங்களம்)
  • கதிரேசன் கனிஷ்டக் கல்லூரி (தமிழ்)

சமயத்தளங்கள்[தொகு]

  • புனித மரியாள் ஆலயம் (கத்தோலிக்கம்)
  • ஜும்மா பள்ளிவாசல் (இஸ்லாம்)
  • நாட்டுப் பள்ளி (இஸ்லாம்)
  • மாரியம்மன் கோவில் (இந்து)
  • கதிரேசன் கோவில் (இந்து)
  • புனித அந்திரேயர் ஆலயம் (கிறிஸ்தவம்)
  • அனுருத்த பௌத்த விகாரை (பௌத்தம்)

குறிப்புகள்[தொகு]

  1. மூலம்2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: நாவலப்பிட்டி நகரசபை[தொடர்பிழந்த இணைப்பு]
  2. மூலம்2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: பஸ்பாகே கோரளை பிரதேசசபை [தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணை[தொகு]

  • ஆசிய விபத்து தடுப்பு தகவல்கள், தொகுப்பு 7, இல. 4, ஒக்டோபர்-டிசம்பர் 2001

வெளியிணப்புகள்[தொகு]


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவலப்பிட்டி&oldid=3658897" இலிருந்து மீள்விக்கப்பட்டது