உள்ளடக்கத்துக்குச் செல்

பன்விலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

7°22′0″N 80°43′0″E / 7.36667°N 80.71667°E / 7.36667; 80.71667

பன்விலை

பன்விலை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°22′01″N 80°43′00″E / 7.367°N 80.7167°E / 7.367; 80.7167
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 897.9408 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
26687

பன்விலை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயலாளர் பிரிவு ஆகும். பன்விலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் பன்விலை பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுகிறது.

புவியியலும் காலநிலையும்

[தொகு]

பண்விலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 800-1000 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 22 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

[தொகு]

இது இந்திய தமிழர்ளை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் இந்து மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 26687 9981 93 15353 1195 52 13
கிராமம் 11877 8792 57 2098 881 36 7
தோட்டப்புறம் 14810 1189 36 13255 314 16 5

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 26687 9873 14301 1231 938 336 8
கிராமம் 11877 8770 1973 886 165 80 3
தோட்டப்புறம் 14810 1103 12328 345 773 256 5

கைத்தொழில்

[தொகு]

இங்கு கிராமப்புரங்களில் நெற்பயிர்ச் செய்கை சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடல் மட்டத்தில் இருந்தான உயரம் அதிகரிக்கும் போது நெற்பயிர்செய்கை குறைந்துச் செல்கிறது இப்பகுதிகளில் மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. பன்விலையின் உயர் நிலங்களில் தேயிலை பெருந்தோட்டங்கள் காணப்படுகின்றன. இவை இம்மக்களின் முக்கிய சிவனோபாய தொழிலாக காணப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]


உசாத்துணைகள்

[தொகு]


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்விலை&oldid=2228654" இலிருந்து மீள்விக்கப்பட்டது