பேச்சு:பன்விலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெரன்ஸ், நீங்கள் அருமையாக ஆக்கிவரும் இலங்கை பற்றிய கட்டுரைகளில், "ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்" என்று குறிக்கின்றீர்கள் இது என்ன என்று விளங்க வில்லை. செயலாளர் என்பதை செயளாலர் என்று கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். பிரதேச செயலாளர் பிரிவு என்றால் என்ன? ஒரு நிலப் பகுதியை ஆள ஆட்சிப் பொறுப்பு கொண்ட ஒரு செயலாளரின் கீழ் உள்ள பகுதியா? நாட்டின் பகுதிகளை ஆட்சி செய்வதற்கு எப்படிப் பகுத்துள்ளார்கள் என்று எங்கேனும் குறிப்பது நல்லது. Regional secretariate என்று ஏதும் உள்ளதா என்றும் விளங்க வில்லை. இலங்கையில் ஒன்பது "மாகாணம்" (province), 25 மாவட்டம் (??) (district) இருக்கின்றது என நினைக்கின்றேன். இந்த பிரதேச செயலாளர் பிரிவு என்பது என்ன ? --செல்வா 15:16, 7 ஏப்ரல் 2007 (UTC)

ஆம் பிழையாக எழுதிவிட்டேன் கட்டுரைகளில் மாற்றங்களைச் செய்துவிடுகிறேன். இலங்கையின் அரசியல் நாடு >>மாகாணம்>>நகரசபை,பிரதேச சபை எனற அமைப்பையும் `நிர்வாகாம் சனாதிபதி>>>மாகான ஆளுனர்>>> பிரதேச செயலாளர் >>கிராமசேவகர் என்ற அமைப்பில் செகிறது. இதற்கு பிரிதான கட்டுடரை ஒன்றை விரைவில் எழுதுகிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 15:24, 7 ஏப்ரல் 2007 (UTC)
டெரன்ஸ், விளக்கத்திற்கு நன்றி. ஓ பிரதேச சபை என்பது நகரசபையின் ஓர் உட்பிரிவா! இவை எல்லாம் இலங்கையில் தமிழரிடையே பெருவழக்கில் இருக்கும் சொல்லாக இருந்தாலும், நகரவை, வட்டமன்றம், வட்டச் செயலாளர், ஊரூழியர் என்று நல்ல தமிழில் சொற்களை இட்டு ஆளுமாறு பரிந்துரைக்கிறேன். தமிழ்நாட்டிலும் 1920களில் காரியதரிசி, சபை என்னும் சொற்களை ஆண்டனர், ஆனால் இன்று செயலாளர் அல்லது செயலர், என்றும், அவை, மாவாட்டம் (முன்னர் ஜில்லா), வட்டம் (முன்னர் தாலூக்கா) முதலான சொற்களை ஆளுகின்றனர். நல்ல மாற்றங்களை நாம் துணிந்து வரவேற்க வேண்டும். தமிழகமும், இலங்கையும், தமிழ் மொழி வழக்குகளில் நெருக்கம் அடைதல் மிகவும் தேவையான ஒன்று. பிறைக்குறிகளில் இன்றைய வழக்குகளைக் குறிக்கலாம். நல்ல தமிழ்ச் சொற்களை துணிந்து எடுத்தாளுவது நல்லது என்பது என் கணிப்பு.--செல்வா 16:55, 7 ஏப்ரல் 2007 (UTC)


தலைப்பில் பன்விலை, உள்ளடக்கத்தில் பண்விலை - எது சரி?--ரவி 15:32, 7 ஏப்ரல் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பன்விலை&oldid=121896" இலிருந்து மீள்விக்கப்பட்டது