லிந்துலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லிந்துலை இலங்கையின் மத்திய மாகணத்தின் நுவரெலியா தேர்தல் மாவடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான கொத்மலை ஓயாவின் கரையில் அமைந்துள்ளது. இந்தியத் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஒரு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அரசியல் நிர்வாகம் தலவாக்கலை-லிந்துலை இணந்த நகரசபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யப்பான் நாட்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டம் காரணமாக தலவாக்கலை நகரின் பெரும் பகுதி நீருள் மூழ்கவுள்ளதால் அதற்கு மிக அருகில் அமைந்துள்ள லிந்துலை நகரம் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிந்துலை&oldid=2754267" இருந்து மீள்விக்கப்பட்டது