உள்ளடக்கத்துக்குச் செல்

பொகவந்தலாவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொகவந்தலாவை

பொகவந்தலாவை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°48′00″N 80°41′00″E / 6.8000°N 80.6833°E / 6.8000; 80.6833
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 4970(அடி) 1514 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 22060
 - +052
 - CP

பொகவந்தலாவை (Bogawantalawa) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அட்டன், பலாங்கொடை நகரங்களுடன் பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் நோர்வூட் வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள பொகவந்தலாவை பள்ளத்தாக்கு தேயிலைக்கு பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வசதிகள்

[தொகு]

அடைவு

[தொகு]

பொகவந்தலாவை நகரம் இலங்கை இரயில் வலையமைப்பால் இணைக்கப்பட்ட நகரமன்று. போக்குவரத்து பெருந்தெரு மூலமாகவே நடைபெறுகின்றது. பொகவந்தலாவை நகரை அட்டனிலிருந்து நோர்வுட் வழியாகவும், பலாங்கொடையிலிருந்து பின்னவளை வழியாகவும் பேருந்து அல்லது தனியார் ஊர்திகள் மூலமாக அடையலாம்.

மருத்துவ வசதி

[தொகு]

இங்கு இலங்கை அரசின் மாவட்ட வைத்தியசாலை அமைந்துள்ளது. தோட்டங்களுக்கான தனிப்பட்ட வைத்திய சாலைகளும் காணப்படுகின்றன.

கல்வி

[தொகு]

இங்கு ஒரு சிங்கள மொழி அரச பாடசாலையும் 2 தமிழ் மொழி மூல அரச பாடசாலைகளும் அமைந்துள்ளன. இங்கு உயர்தரம் வரையான வகுப்புகள் நடைபெறுகின்றன. அவையாவன:

மக்கள்

[தொகு]

பொகவந்தலாவை நகரைச் சூழ 44 தோட்டப்பிரிவுகள் உள்ளன. அத்துடன் இந்த நகரைச் சூழவுள்ள தோட்டப்பகுதிகளில் 22 தமிழ் பாடசாலைகள் உள்ளன. பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலைத் தொழிற்துறையில் ஆர்வம் காட்டுகினறனர். கால் நடை வளர்ப்பு, விவசாயம் என்பன இங்கு வாழும் மக்களின் சுயத் தொழிலாகும். பொகவந்தலாவைப் பிரதேசத்தில் இரத்தினக்கற் படிமங்கள் அதிகமாகவுள்ளதால் ஒரு காலத்தில் அரசாங்கத்தின் அனுமதியுடன் மாணிக்கக் கற் அகழ்வு நடவடிக்கைகளும் இடம் பெற்றன. எனினும் இந்தத் தொழிலால் பிரதேசத்தின் சுற்றுச்சூழல், சமூக கலாசாரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பொகவந்தலாவை எல்டொப்பஸ் தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வி. கே. வெள்ளையன் பிறந்தார். 1956 ஆம் இடம் பெற்ற ஸ்ரீ எழுத்துப் போராட்டத்தில் கொட்டியாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த ஐயாவு மற்றும் பிரான்சு ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் கல்லறை கொட்டியாக்கலைத் தோட்டத்தில் உள்ளது. அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் பொகவந்தலாவை பிரதேசத்தில் உருவாகியுள்ளார்கள். குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ், ஊடகவியலாளர்களான சோ. ஸ்ரீதரன், சக்திவேல் ஸ்ரீதர், மாரி மகேந்திரன் போன்றோர் பொகவந்தலாவைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கை பொப்பிசைப்பாடகர் ஏ. ஈ. மனோகரனின் பிறப்பிடமும் பொகவந்தலாவையே.

உசாத்துணை

[தொகு]


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொகவந்தலாவை&oldid=2567896" இலிருந்து மீள்விக்கப்பட்டது