பலாங்கொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பலாங்கொடை
බලන්ගොඩ
Balangoda
நகரம்
பலாங்கொடை is located in இலங்கை
பலாங்கொடை
பலாங்கொடை
இலங்கையின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°39′N 80°41′E / 6.650°N 80.683°E / 6.650; 80.683ஆள்கூற்று: 6°39′N 80°41′E / 6.650°N 80.683°E / 6.650; 80.683
நாடு  இலங்கை
Province சபரகமுவா மாகாணம்
District இரத்தினபுரி மாவட்டம்
நேர வலயம் +5.30
இணையத்தளம் www.searchbalangoda.com

பலாங்கொடை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரசபை ஆகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு கிழக்குத் திசையில் 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 160 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது.

புவியியலும் காலநிலையும்[தொகு]

இது இலங்கையின் புவியியல் பிரிவான மத்திய மலை நாட்டில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 750 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 2000-2500 மி.மீ. ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்[தொகு]

இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட நகரமாகும். இங்கு 2001ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் படி 11,397 மக்கள் வாழ்கின்றார்கள். இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:

மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய[1]
11,397 7,667 1,246 354 2,040 27 63

சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:

மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
11,397 7,293 1,199 2,073 688 144 0

குறிப்புகள்[தொகு]

  1. மலே, இலங்கைச் செட்டி, இந்தியர் உட்பட

உசாத்துணைகள்[தொகு]


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலாங்கொடை&oldid=1849076" இருந்து மீள்விக்கப்பட்டது