உள்ளடக்கத்துக்குச் செல்

கலவானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°32′12.84″N 80°24′28.08″E / 6.5369000°N 80.4078000°E / 6.5369000; 80.4078000

கலவானை

கலவானை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°32′13″N 80°24′28″E / 6.5369°N 80.4078°E / 6.5369; 80.4078
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 292 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
48201
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70450
 - +9445
 - SAB

கலவானை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.கலவானை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் நிர்வாக அலகான பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்

[தொகு]

கலவானை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 292 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

[தொகு]

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 48201 40322 0 7747 87 0 45
கிராமம் 44296 39625 0 4551 79 0 28
தோட்டப்புறம் 3905 697 0 3196 8 0 11

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 48201 40758 6726 160 266 259 32
கிராமம் 44296 39957 3874 147 117 180 21
தோட்டப்புறம் 3905 801 2852 13 149 79 11

கைத்தொழில்

[தொகு]

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.

அரசியல்

[தொகு]

2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: கொலொன்னை பிரதேசசபை

கட்சி வாக்குகள் சதவீதம் ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10,722 53.86 6
ஐக்கிய தேசியக் கட்சி 7,222 36.28 2
மக்கள் விடுதலை முன்னணி 1,904 9.56 1
ஏனைய 59 0.31 -
செல்லுபடியான வாக்குக்கள் 19907 95.78% -
நிராகரிக்கப்பட்டவை 877 4.22% -
அளிக்கப்பட்ட வாக்குகள் 20784 74.65% -
மொத்த வாக்காளர்கள் 27842 ** -

மூலம்:[1]

குறிப்புகள்

[தொகு]
  1. மூலம்[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணைகள்

[தொகு]


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலவானை&oldid=3365670" இலிருந்து மீள்விக்கப்பட்டது