உள்ளடக்கத்துக்குச் செல்

எகலியகொடை

ஆள்கூறுகள்: 6°50′59″N 80°16′16″E / 6.84972°N 80.27111°E / 6.84972; 80.27111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகலியகொடை

எகலியகொடை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°51′00″N 80°16′00″E / 6.8500°N 80.2667°E / 6.8500; 80.2667
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 156 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
63,332
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70600
 - +9445
 - SAB

எகலியகொடை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும் (கிராமம்) மேலும் இங்கு காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் எகலியகொடை ஆகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு வடமேற்குத் திசையில் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 70 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது.

புவியியலும் காலநிலையும்

[தொகு]

இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 156 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 3500-5000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

[தொகு]

இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகை மற்றும் ஏனைய கணிப்பீடுகளில் எகலியகொடை நகரமாக கணிக்கப்படாது கிராமிய சனத்தொகையாகவே கணக்கிடப்படுகிறது.

இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய[1]
மொத்தம் 63,332 57,639 366 2,214 3,042 7 64
கிராமிய 61,048 57,343 278 320 3,036 7 64
தோட்டப்புரம்[2] 2,284 296 88 1,894 6 0 0

சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 63,332 57,410 2,226 3,088 423 174 11
கிராமிய 61,048 57,099 483 3,081 266 108 11
தோட்டப்புரம்[2] 2,284 311 1,743 7 157 66 0

கைத்தொழில்

[தொகு]
எகலியகொடை பிரதேச செயளர்பிரிவு

இங்கு நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயில, இறப்பர், தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரடேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.

இரத்தினகல் கைத்தொழில் மற்றும் வியாபாரத்துக்கு பிரசித்தமான இலங்கையின் நகரங்கள்:

குறிப்புகள்

[தொகு]
  1. மலே, இலங்கைச் செட்டி, இந்தியர் உட்பட
  2. 2.0 2.1 தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வசிப்பவர்கள்

உசாத்துணைகள்

[தொகு]


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகலியகொடை&oldid=3769210" இலிருந்து மீள்விக்கப்பட்டது