உள்ளடக்கத்துக்குச் செல்

பெல்மதுளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°37′28″N 80°33′07″E / 6.62444°N 80.55194°E / 6.62444; 80.55194

பெல்மதுளை

பெல்மதுளை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°38′00″N 80°32′00″E / 6.6333°N 80.5333°E / 6.6333; 80.5333
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 204 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
84,450
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70070
 - +9445
 - SAB

பெல்மதுளை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறியநகரமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு தென்கிழக்குத் திசையில் 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 120 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது.

புவியியலும் காலநிலையும்

[தொகு]

இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 216 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 2000-2500 மி.மீ. ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

[தொகு]

இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட நகரமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். நகரில் இங்கு 2001ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் படி 562 பேரே வாழ்கின்றார்கள், ஆனால் நகரைச் சூழவுள்ள பிரதேசங்களில் 83,888 பேர் வசிக்கின்றார்கள். இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய[1]
நகரம் 562 542 19 0 0 1 0
கிராமிய 72,213 69,410 1,843 547 336 20 57
தோட்டப்புரம்[2] 11,675 2,003 3,593 5,973 94 8 4

சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
நகரம் 562 538 14 3 7 0 0
கிராமிய 72,213 69,375 2,031 397 214 172 24
தோட்டப்புரம்[2] 11,675 2,039 8,964 141 411 116 4

குறிப்புகள்

[தொகு]
  1. மலே, இலங்கைச் செட்டி, இந்தியர் உட்பட
  2. 2.0 2.1 தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வசிப்பவர்கள்

உசாத்துணைகள்

[தொகு]


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்மதுளை&oldid=2577298" இலிருந்து மீள்விக்கப்பட்டது