கொத்மலை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொத்மலை ஆற்றுக்கு மேலான சங்கிலிப்பாலமொன்று.

கொத்மலை ஆறு அல்லது கொத்மலை ஓயா இலங்கையின் மத்திய மாகாணத்தில் பாயும் ஆறாகும்.இது மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறாகும். கொத்மலை ஆறு அக்ரா ஆறாக ஓட்டன் சமவெளியில் ஊற்றெடுக்கிறது. வழியில் தம்பகஸ்தலாவை ஆறு, நானு ஓயா, புண்டுல் ஆறு, பூணா ஆறு என்பன கலக்கின்றன. கொத்மலை ஆறு நாவலப்பிட்டிக்கு தெற்கே மகாவலி கங்கையுடன் இணைகின்றது.[1]

நீர் மின்த்திட்டங்கள்[தொகு]

கொத்மலை ஆறு மகாவலி கங்கையுடம் கலக்குமிடத்துக்கு 6.6 கிலோ மீட்டர் (4.1 மைல்) மேலாற்றில் கடதொர என்னுமிடத்தில் 87.0 மீட்டர் உருயரமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட அனைக்கட்டு ஒன்றின் மூலம் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வனக்கட்டு துரிதமகாவலி திட்டத்தின் கீழ் சுவீடன் அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படது. இவ்வணைக்கட்டுக்கான கட்டுமானப்பணிகள் 1979 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு முதல் மின்சார உற்பத்தியை தொடங்கியது.[2]

செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி இவ்வாற்றில் அமைந்துள்ள முக்கியமான நீர்வீழ்ச்சியாகும். இவ்வாற்றை தலவாக்கலை நகருக்கண்மையில் செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சிக்கு மேலாக அனைக்கட்டி மறிப்பதன் மூலம் மேல்கொத்மலை நீர்மின்த்திட்டம் அமைக்கபட தொடக்க வேலைகள் நடபெற்று வருகின்றன. இத்திட்டம் சூழல் பாதிப்பை ஏற்படுத்துபதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.[3]  

ஆதாரங்கள்[தொகு]

  1. ஆய்வொன்று
  2. "இலங்கை மகாவலி அதிகாரசபை". 2007-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-04-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மேல் கொத்மலை ஒரு தோல்வி". 2007-07-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-04-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்மலை_ஆறு&oldid=3583111" இருந்து மீள்விக்கப்பட்டது