முத்துஐயன்கட்டு குளம்

ஆள்கூறுகள்: 09°12′07″N 80°36′31″E / 9.20194°N 80.60861°E / 9.20194; 80.60861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்தையன் கட்டுக்குளம்
முத்தையன் கட்டுக்குளம் is located in Northern Province
முத்தையன் கட்டுக்குளம்
முத்தையன் கட்டுக்குளம்
வட மாகாணத்தில் அமைவிடம்]]
அமைவிடம்வட மாகாணம்
ஆள்கூறுகள்09°12′07″N 80°36′31″E / 9.20194°N 80.60861°E / 9.20194; 80.60861
வகைசெயற்கைத் தேக்கம்
ஆற்று மூலங்கள்பேராறு
வடிநிலப் பரப்பு66 sq mi (171 km2)[1]
மேலாண்மை முகமைநீர்ப்பாசனத் திணைக்களம்,
வட மாகாண சபை
நீர்க் கனவளவு41,000 ஏக்கர்.அடி (50,572,755 கனமீட்டர்[1]

முத்தையன் கட்டுக்குளம் (Muthuiyankaddu Kulam) இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசனக் குளமாகும். இது ஒட்டிசுட்டானில் இருந்து சுமார் 4 மைல் (6 கிலோமீற்றர்) தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. இதன் சரியான அமைவிடம் 09°12'07"N 80°36'31"E ஆகும். செயற்கைக் குளமான இதற்கு நீர் வழங்கும் ஆறு பேராறு (ஆறு) ஆகும்.இதன் பராமரிப்பு வடமாகாணசபை , நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.இதன் மொத்த பரப்பளவு 66 சதுரமைல் (171 சதுர கிலோமீட்டர்). இது 41,000 ஏக்கர் அடி (50,572,755 கனமீற்றர்) கொள்ளளவுடையது.

வரலாறு[தொகு]

பேராற்றில் உள்ள குளம் ஆரம்பகாலத்தில் முத்துராயன் கட்டுக்குளம் என்றும் மண் மலை என்றும் அழைக்கப்பட்டது.[2] 66 சதுரமைல் பரப்பளவு கொண்ட இக்குளத்தின் பராமரிப்பு பணி 1959 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.[3]

1960 ம் ஆண்டு காலத்தின் பிற்பகுதியில் இதன் வரப்புப் பகுதி சுமார் 5,850 அடி ( 1783 மீற்றர்) நீளமுடையதாகவும் 27 அடி ( 8 மீற்றர்) உயரமுடையதாகவும் இருந்தது. அப்போது குளத்தின் கொள்ளளவு  41,000 ஏக்கர் அடியாகவும் ( 50,572,755 கன மீட்டர்) இருந்தது. மேலும் இக்குளத்தின் நீர்ப்பரப்பிடம் சுமார்  3,100 ஏக்கர் ( 1,255 ஹெக்டர்) ஆக உள்ளது.[2] மேலும் குளத்தின் இடது பக்கம் 500 அடி கொண்ட (152 மீட்டர்) கலிங்கு உண்டு.[4] அதன் இடது மற்றும் வலது புறத்தில் உள்ள மதகுகள் ஒவ்வொன்றும் 3 அடி 3 அங்குலம் 4 அடி 6 அங்குலம் கொண்டவை. 2014 ஆம் ஆண்டில் இது 6,100 ஏக்கர்களுக்கு(2469 ஹெக்டர்) நீர்ப்பாசன வசதி அளிக்கும் திறனைக் (கொள்ளவைக்) கொண்டிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Statistical Information of the Northern Province - 2014. வட மாகாண சபை. பக். 93. 
  2. S. Arumugam (1969). Water Resources of Ceylon. Water Resources Board. பக். 279. http://noolaham.net/project/35/3488/3488.pdf. 
  3. S. Arumugam (1969). Water Resources of Ceylon. Water Resources Board. பக். 279. http://noolaham.net/project/35/3488/3488.pdf. 
  4. S. Arumugam (1969). Water Resources of Ceylon. Water Resources Board. பக். 279. http://noolaham.net/project/35/3488/3488.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துஐயன்கட்டு_குளம்&oldid=2631168" இலிருந்து மீள்விக்கப்பட்டது