உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தளம் கடல் நீரேரி

ஆள்கூறுகள்: 08°06′N 79°46′E / 8.100°N 79.767°E / 8.100; 79.767 (Puttalam Lagoon)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தளம் கடல் நீரேரி
அமைவிடம்புத்தளம், இலங்கை
ஆள்கூறுகள்08°06′N 79°46′E / 8.100°N 79.767°E / 8.100; 79.767 (Puttalam Lagoon)
முதன்மை வரத்துகலா ஓயா
மீ ஓயா
வடிநில நாடுகள் இலங்கை
அதிகபட்ச நீளம்28 km (17 mi)
அதிகபட்ச அகலம்12 km (7 mi)
மேற்பரப்பளவு327 km2 (126 sq mi)
சராசரி ஆழம்1–2 m (3.3–6.6 அடி)
அதிகபட்ச ஆழம்5 m (16.4 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டம்
மேற்கோள்கள்[1][2]

புத்தளம் கடல் நீரேரி என்பது 327 km2 (126 சதுர மைல்கள்) பரப்பை உள்ளடக்கிய ஒரு நீர்ப் பரப்பாகும். இது இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டதில் அமைந்துள்ளது. இது இலங்கையின் மிகப்பெரிய கடல் நீரேரி ஆகும். இந்த நீரேரியில் கலா ஓயா மற்றும் மீ ஓயா ஆறுகள் கலக்கின்றன. இந்த நீரேரி தென்னை மரங்கள், திறந்த காடுகள், புல் வெளிகள், கண்டல் தாவரங்கள் போன்றவற்றால் சூழப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மீப்பிடி, இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது. உப்பும் விளைவிக்கபடுவதுடன் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. Management of coastal resources in Puttalam Lagoon, Sri Lanka (PDF), archived from the original (PDF) on 2011-07-22, பார்க்கப்பட்ட நாள் 2010-07-02
  2. S.W. Kotagama, Leonard Pinto, Jayampathi L. Samarakoon, Wetlands of Sri Lanka (PDF), Wetlands International, pp. 52, 53, archived from the original (PDF) on 2012-05-16, பார்க்கப்பட்ட நாள் 2010-07-02{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தளம்_கடல்_நீரேரி&oldid=4000459" இலிருந்து மீள்விக்கப்பட்டது