நையாறு கடற்காயல்

ஆள்கூறுகள்: 9°08′N 80°52′E / 9.133°N 80.867°E / 9.133; 80.867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நையாறு கடற்காயல்
அமைவிடம்முல்லைத்தீவு மாவட்டம், இலங்கை
ஆள்கூறுகள்9°08′N 80°52′E / 9.133°N 80.867°E / 9.133; 80.867
வகைகடற்காயல்
முதன்மை வெளியேற்றம்இந்தியப் பெருங்கடல்
மேற்பரப்பளவு17.6 சதுர கிலோமீட்டர்கள் (6.8 sq mi)
அதிகபட்ச ஆழம்4 மீட்டர்கள் (13 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டம்
குடியேற்றங்கள்அலம்பில்
குமுழமுனை
செம்மலை

நையாறு கடற்காயல் (ஆங்கில மொழி: Nai Aru Lagoon) என்பது இலங்கையின் வடமேற்குப் பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கயவாய் கடற்காயல் ஆகும். இந்தக் கடற்காயலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகும் நையாறு உட்பட பல சிறு ஆறுகளில் இருந்து நீர் வருகின்றது. இந்த கடற்காயலின் நீர் உவர் நீர் ஆகும். நையாறு கடற்காயற் பகுதி தென்னை, பனை மரங்களினாலும், அடர்ந்த காடுகளினாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலம் இறால் மீன்பிடிப்புக்காகவும், நெல் பயிரிடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இக்கடற்காயலில் அலையாத்திக் காடும், கடற்புல் பாத்திகளும் காணப்படுகின்றன. இங்குள்ள பகுதிகளுக்கு நீள் சிறகு கடற்பறவை, வாத்து, ஆலா போன்ற நீர்ப்பறவைகள் உட்பட மேலும் பலவகைக் கடற்கரைப் பறவைகளும் ஏராளமாக வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  • S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon. "இலங்கை" (PDF). Wetlands International. Archived from the original (PDF) on 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் சனவரி 22, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையாறு_கடற்காயல்&oldid=3575490" இலிருந்து மீள்விக்கப்பட்டது