நீர்கொழும்புக் குடா
நீர்கொழும்புக் குடா | |
---|---|
அமைவிடம் | கிழக்கு மாகாணம், இலங்கை |
ஆள்கூறுகள் | 7°09′N 79°51′E / 7.150°N 79.850°E |
வகை | குடா |
முதன்மை வரத்து | யா-எல டம்டுகம் ஓயா பழைய ஒல்லாந்தக் கால்வாய் |
முதன்மை வெளியேற்றம் | இந்து சமுத்திரம் |
மேற்பரப்பளவு | 35.02 சதுர கிலோமீட்டர்கள் (13.52 sq mi) |
அதிகபட்ச ஆழம் | 1 மீட்டர் (3.3 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | கடல் மட்டம் |
குடியேற்றங்கள் | நீர்கொழும்பு |
நீர்கொழும்புக் குடா என்பது இலங்கையின் தென்மேற்குப் பகுதியான நீர்கொழும்பிலுள்ள ஒரு மிகப்பெரிய கழிமுகக் குடாவாகும்.
இந்தக் குடாவில் சில சிறிய ஆறுகளும் ஒரு கால்வாயும் கலக்கின்றன. இது ஒரு சிறிய கால்வாய் மூலம் வடக்கில் நீர்கொழும்பு நகருக்கருகில் கடலுடன் கலக்கிறது. இது அதிக மக்கள் தொகை கொண்ட வலயத்தால் சூழப்பட்டுள்ளதுடன் நெல் நிலங்கள், தென்னை பயிர்ச்செய்கை மற்றும் புல் நிலங்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலம் மீன்பிடிக்கும் விவசாயத்திற்கும் பயன்படுகிறது. இந்தக்குடா பெருந்தொகையான சதுப்பு நிலத்தைக் கொண்டுள்ளது. இந்தக்குடா கோர்மொரண்ட்ஸ், ஹீரோன்ஸ், எக்றேட்ஸ், கல்ஸ், டேர்ன்ஸ் போன்ற நீர்ப்பறவைகளையும் கவர்ந்து வருகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon. "Sri Lanka". Wetlands International இம் மூலத்தில் இருந்து 16 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/67hJECqEd?url=http://ramsar.wetlands.org/Portals/15/SriLanka.pdf. பார்த்த நாள்: 23 May 2009.