தெதரு ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெதரு ஆறு
DeduruOya-January2012-01.JPG
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்சிலாபம்
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்
நீளம்142 கி.மீ.

தெதரு ஆறு (Deduru Oya) இலங்கையில் உள்ள ஒர் ஆறாகும். இது மாத்தளையில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இலங்கையில் பாய்கின்ற ஆறுகளில் ஆறாவது நீளமான ஆறாக அறியப்படுகிறது. 142 கிலோமீட்டர் (88 மைல்) நீளம் கொண்டு நான்கு மாகாணங்களில் ஐந்து மாவட்டங்களில் பாய்கிறது. நீரோட்டத்தின் படி இது 8 ஆவது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4313 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 27 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2616 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 6 ஆவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2007-07-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-04-29 அன்று பார்க்கப்பட்டது.
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2005-05-25 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-04-29 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெதரு_ஆறு&oldid=3558971" இருந்து மீள்விக்கப்பட்டது