காசல்ரே அணை

ஆள்கூறுகள்: 06°52′24″N 80°33′59″E / 6.87333°N 80.56639°E / 6.87333; 80.56639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசல்ரே அணை (Castlereigh Dam)  களனி ஆற்றின் முக்கிய துணை நதியான கெகல்கமு ஓயாவின் குறுக்கே கட்டப்பட்ட ஈர்ப்பு அணை ஆகும். இலங்கையின் மத்திய மாகாணத்தில், அட்டனுக்கு தென்மேற்கே சுமார் 3 கி.மீ (1.9 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[1]

காசல்ரே அணை
காசல்ரே அணை is located in இலங்கை
காசல்ரே அணை
Location of காசல்ரே அணை in இலங்கை
நாடுஇலங்கை
அமைவிடம்அட்டன், மத்திய மாகாணம்
புவியியல் ஆள்கூற்று06°52′24″N 80°33′59″E / 6.87333°N 80.56639°E / 6.87333; 80.56639
நோக்கம்மின் ஆற்றல்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
திறந்ததுசனவரி 1965
உரிமையாளர்(கள்)இலங்கை மின்சார சபை
அணையும் வழிகாலும்
வகைபுவியீர்ப்பு அணை
தடுக்கப்படும் ஆறுகெகல்கமு ஓயா
விமல சுரேந்திர மின் நிலையம்
ஆள்கூறுகள்06°54′31″N 80°31′30″E / 6.90861°N 80.52500°E / 6.90861; 80.52500
சுழலிகள்2 × 25 MW
நிறுவப்பட்ட திறன்50 MW

நீர்த்தேக்கமும் மின் நிலையமும்[தொகு]

காசல்ரே அணை காசல்ரே நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இந்த நீர்த்தேக்கம் கெகல்காமு ஓயாவிலிருந்து வரும் நீரின் மூலம் முழுமையாக   பராமரிக்கப்படுகிறது. நீர்த்தேக்கத்தில் இருந்து நார்டன் பாலத்திற்கு அருகே அமைந்துள்ள விமலாசுரேந்திர மின் நிலையத்திற்கு  நீர் திருப்பி விடப்படுகிறது. அதே இடத்தில் அமைந்துள்ள நார்டன் அணையால் உருவாக்கப்பட்ட நார்டன் நீர்த்தேக்கத்தில்  மின் நிலையம் நீரை வெளியேற்றுகிறது.

இந்த மின் நிலையம் இரண்டு 25 மெகாவாற்று அலகுகளை கொண்டுள்ளது. பெறப்படும் கொள்ளளவு 50 மெகாவாற்று ஆகும். இரண்டு பிரிவுகளும் சனவரி 1965 இல் தொடங்கப்பட்டன.[2]

2018 மார்ச்சு மாதத்தில் காசல்ரே நீர்த்தேக்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை மின்சார சபை". Archived from the original on 2014-01-18. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
  2. "CEB Genaration details Laxapana Complex". 16 சனவரி 2014. Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசல்ரே_அணை&oldid=3928737" இலிருந்து மீள்விக்கப்பட்டது