கந்தளாய் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தளாய் அணை
Kantalai Tank, Sri Lanka.jpg
கந்தளாய் அணை is located in இலங்கை
கந்தளாய் அணை
Location of கந்தளாய் அணை in இலங்கை
நாடுஇலங்கை
அமைவிடம்கந்தளாய்
நோக்கம்நீர்ப்பாசனம்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
உரிமையாளர்(கள்)மகாவலி அதிகாரசபை
அணையும் வழிகாலும்
வகைஅணைக்கட்டு
தடுக்கப்படும் ஆறுபேராறு
உயரம் (அடித்தளம்)50 ft (15 m)
நீளம்14,000 ft (4,267 m)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்கந்தளாய்க் குளம்

கந்தளாய் அணை (Kantale Dam) இலங்கை கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கட்டுக்கரை அணையாகும். இது வேளாண்மைக்காக நீரைத்தேக்க உதவுகிறது. இது 14,000 அடி (4,267 மீட்டர்) நீளமும், 50 அடி (15 மீட்டர்) உயரமும் கொண்டது. 1986 ஏப்ரல் 20 ஆம் தேதி இந்த அணை உடைந்து உயிர்ச்சேதம் உட்படப் பெரும் சேதங்களை விளைவித்தது. பேராற்றை மறித்துக் கட்டப்பட்டுள்ள இந்த அணை ஆற்று நீரின் பெரும்பகுதியைத் தேக்கி வைத்துக்கொள்வதால் வெளியேறுப்போது இது சிறிய ஆறாகத் திருகோணமலை துறைமுகப் பகுதியில் கடலை அடைகிறது.

1986 அணை உடைப்பு[தொகு]

1986 ஏப்ரல் 20 அதிகாலை 3.00 மணிக்கு அணை உடைத்துக்கொண்டது. குளத்து நீர் ஒரு சுவர்போல தாழ்ந்த பகுதிகளில் உள்ள ஊர்களுக்குள் புகுந்தது. ஏறத்தாழ 120-180 வரையிலானோர் இறந்தனர்[1]. 1600 வீடுகள் சேதமாயின. 2000 ஏக்கர் நெற்பயிர் அழிந்துபோனது. 8,000 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. மிகவும் பாரமான வண்டிகள் அணையின் மீது போக்குவரத்துச் செய்தமை அணை உடைந்ததற்கான காரணங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.[2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "The leak that turned into a flood". சண்டே டைம்சு. 1 May 2011. http://www.sundaytimes.lk/110501/Plus/plus_05.html. பார்த்த நாள்: 13 February 2014. 
  2. Anura Maitipe (31 December 2003). "Kantale dam in danger". டெய்லி நியூசு. http://archives.dailynews.lk/2003/12/31/new01.html. பார்த்த நாள்: 13 February 2014. 
  3. Namini Wijedasa (7 August 2005). "Urgent call for dam safety". தி ஐலண்டு. Archived from the original on 24 பிப்ரவரி 2014. https://web.archive.org/web/20140224102102/http://www.island.lk/2005/08/07/features4.html. பார்த்த நாள்: 13 February 2014. 
  4. R.C. Jayasinghe (18 ஏப்பிரல் 2021). "Kantale Dam Disaster 35 years later". தி ஐலண்டு. Archived from the original on 24 பிப்ரவரி 2014. https://island.lk/kantale-dam-disaster-35-years-later/. பார்த்த நாள்: 23 ஏப்பிரல் 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தளாய்_அணை&oldid=3421353" இருந்து மீள்விக்கப்பட்டது