ராணா வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணா வம்சம்
राणा वंश
நாடுநேபாள இராச்சியம்
விருதுப்
பெயர்கள்
லம்ஜுங் மற்றும் காஸ்கின் மகாராஜா
நிறுவிய
ஆண்டு
1846
நிறுவனர்ஜங் பகதூர் ராணா
இறுதி ஆட்சியர்மோகன் ஷாம்செர் ஜங் பகதூர் ராணா
தற்போதைய
தலைவர்
அரச பதவி ஒழிக்கப்பட்டது
முடிவுற்ற ஆண்டு1951
இனம்கஷ் இராசபுத்திரர்
ஜங் பகதூர் ராணா


ராணா வம்சம் (Rana dynasty) (நேபாளி: राणा वंश, நேபாளத்தை 1846 - 1951 முடிய ஆண்ட, கஸ் ராஜ்புத்திர சர்வாதிகார ராணா வம்சத்தினர் ஆவார். [1] நேபாள இராச்சிய ஷா மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்கள்.

ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர் 1846ல் நேபாள இராச்சியத்தின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, பெயரளவில் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவை மன்னர்களாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார்.

இவ்வம்சத்தினர் தங்களை லம்ஜுங் மற்றும் காஸ்கின் மகாராஜாக்கள் என அழைத்துக் கொண்டனர்.

நாராயணன் ஹிட்டி அரண்மனை, காத்மாண்டு, நேபாளம்

ராணா வம்ச தலைமை அமைச்சர்கள் & தலைமைப் படைத்தலைவர்கள்[தொகு]

19 செப்டம்பர் 1846 அன்று நடைபெற்ற கோத் படுகொலைகளுக்குப் பின்னர் நேபாள மன்னர்களைக் கைப்பாவையாகக் கொண்டு, இவ்வம்சத்தின் படைத்தலைவர் ஜங்பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் பரம்பரை பிரதம அமைச்சர்களாகவும், தலைமைப் படைத் தலைவர்களாகவும் 1951 முடிய சர்வாதிகார ஆட்சி செலுத்தினர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா_வம்சம்&oldid=2465866" இலிருந்து மீள்விக்கப்பட்டது