தாரு மக்கள்
தாரு இனப் பெண் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
நேபாளம் | 1,737,470[1] |
பிகார் | 159,939[2] |
உத்தரப் பிரதேசம் | 105,291 |
உத்தரகாண்ட் | 91,342 |
மொழி(கள்) | |
தாரு மொழிகள், நேபாளி மொழி | |
சமயங்கள் | |
இந்து சமயம், பௌத்தம், பாரம்பரிய நம்பிக்கைகள் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
|
தாரு மக்கள் (Tharu people) நேபாள நாட்டின் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்த தராய் பகுதியில் அதிகமாக வாழும் இன மக்கள் ஆவார். [3][4][5][6] தாரு மக்கள், இந்தியாவின் கிழக்கு உத்தரகாண்ட், வடக்கு உத்தரப் பிரதேசம், வடக்கு பிகார் மாநிலங்களிலும் வாழ்கின்றனர். [7][8][9]
தாரு இன மக்களை, தேசிய இனங்களில் ஒன்றாக நேபாள அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. [10] இந்தியாவில் தாரு மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது. [7]
வரலாறு
[தொகு]வாய் வழி செய்திகளின் படி, ராணா தாரு மக்கள், இராஜஸ்தானின் தார் பாலைவனத்தின் இராசபுத்திரர்கள் புலம்பெயர்ந்து, கிழக்கு உத்தரகாண்ட், வடக்கு உத்தரப் பிரதேசம், வடக்கு பிகார் மற்றும் நேபாளத்தின் தராய் சமவெளிகளில் குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள் எனக்கருதப்படுகின்றனர்.
வேறு சில வரலாற்று ஆய்வாளர்கள், தாரு மக்கள், கபிலவஸ்துவில் வாழ்ந்த சாக்கியர் மற்றும் கோலியர் குலங்களின் வழித்தோன்றல்கள் எனக் கருதுகின்றனர்.[11]
நவீன வரலாற்றில் (1700 -1999)
[தொகு]பதினெட்டாம் நூற்றாண்டில், ஒன்றிணைந்த நேபாள இராச்சியம் நிறுவப்படும் வரையில் தாரு மக்கள், குடும்பம் குடும்பமாக கொத்தடிமைகளாக தராய் சமவெளிகளில் வாழ்ந்தனர்.[12]நேபாளத்தில் 1854ல் ராணா வம்ச ஆட்சியில், மது அருந்தும் தாரு மக்களை தீண்டத்தகாதவர் என அறிவிக்கப்பட்டது. [13][14]
மேற்கு தராய் பகுதியில் வாழ்ந்த தாரு மக்களின் விளைநிலங்களை, அங்கு குடியேறிவர்கள் வாங்கி, தாரு மக்களை கொத்தடிமைகளாக நடத்தினர்.[6]
சித்வான் தேசியப் பூங்காவை அமைக்கும் போது, அப்பகுதிகளில் வாழ்ந்த தாரு மக்களை வலுக்கட்டாயமாக வேறு இடங்களுக்கு வெளியேற்றினர். [5]
அன்மைய வரலாறு (2000 முதல் - தற்போது வரை)
[தொகு]சூலை, 2000ஆம் ஆண்டில் நேபாள ஜனநாயக ஆட்சி முறை கொண்டுவரப்பட்டு, கொத்தடிமை முறையை சட்டவிரோதமாக செயல் அறிவித்த போதிலும், [15] தாரு மக்கள் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின் தங்கிய சமூகத்தினராகவே உள்ளனர். [16]
மக்கள் தொகையியல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில், தாரு மக்களின் மக்கள் தொகை 17,37,470 ஆக உள்ளது. இது நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையில் 6.6% ஆகும். [1]
புறமணத்தடை பயிலும் தாரு மக்களின் உட்கிளைகள், தராய் சமவெளியில் சிதறி வாழ்கின்றனர். [17][5]
பண்பாடு
[தொகு]தாரு மக்கள் தங்களை காட்டு மக்கள் என அழைத்துக் கொள்கின்றனர். இவர்கள் காடுகளில் நெல், ஆமணக்கு, சோளம், பயறு, மூலிகைச் செடிகள், காய்-கனிகளைப் பயிரிடுவதுடன் தேன் சேகரிப்பையும் செய்கின்றனர். மேலும் மான், முயல் மற்றும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடி வாழ்கின்றனர். [5]
மொழிகள்
[தொகு]நேபாள-இந்திய எல்லைப்புறங்களில் வாழும் தாரு மக்கள், அவதி, போஜ்புரி, மைதிலி இந்தி மற்றும் உருது கலந்த தாரு மொழியின் பல வட்டார வழக்கு மொழிகள் மற்றும் நேபாளி மொழியும் பேசுகின்றனர். [6]
உணவு
[தொகு]-
தாரு மக்களின் மீன் கருவாடு
-
அரிசி மூலம் காய்ச்சிய சாராயம்
-
திக்காரி; தாரு மக்களின் உணவு
-
மிளகாயுடன் வேக வைத்த சோளக் கட்டை
சமயம்
[தொகு]தாரு மக்கள் இயற்கையையும், பல தெய்வ வழிபாடு கொண்டவர்கள். இருப்பினும் இந்து மற்றும் பௌத்த சமயங்களையும் பின்பற்றுகின்றனர். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Central Bureau of Statistics (2012). National Population and Housing Census 2011 (National Report) (PDF). Government of Nepal, National Planning Commission Secretariat, Kathmandu. Archived from the original (PDF) on April 18, 2013.
{{cite book}}
: Unknown parameter|deadurl=
ignored (help) - ↑ ORGI. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner,India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
- ↑ Bista, D. B. (1971). People of Nepal (second ed.). Kathmandu: Ratna Pustak Bhandar.
- ↑ Rajaure, D. P. (1981). "Tharus of Dang: the people and the social context". Kailash (Kathmandu: Ratna Pustak Bhandar) 8 (3/4): 155–185. http://www.thlib.org/static/reprints/kailash/kailash_08_0304_02.pdf.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 McLean, J. (1999). Conservation and the impact of relocation on the Tharus of Chitwan, Nepal. XIX. Himalayan Research Bulletin. பக். 38–44. http://digitalcommons.macalester.edu/cgi/viewcontent.cgi?article=1628&context=himalaya.
- ↑ 6.0 6.1 6.2 Guneratne, A. (2002). Many tongues, one people: The making of Tharu identity in Nepal. Ithaca, New York: Cornell University Press.
- ↑ 7.0 7.1 Verma, S.C. (2010). "The eco-friendly Tharu tribe: A study in socio-cultural dynamics". Journal of Asia Pacific Studies 1 (2): 177–187. https://www.academia.edu/download/24194920/japsvol1no2may2010.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Genes and Resistance to Disease". p. 110. பார்க்கப்பட்ட நாள் 31 March 2017.
- ↑ "Internal Conflicts: Military Perspectives". p. 62. பார்க்கப்பட்ட நாள் 31 March 2017.
- ↑ Lewis, M. P., G. F. Simons, and C. D. Fennig (eds.) (2014). "Tharu, Chitwania: a language of Nepal". Ethnologue: Languages of the World, Seventeenth edition. Dallas, Texas: SIL International, online version.
{{cite book}}
:|author=
has generic name (help); Unknown parameter|chapterurl=
ignored (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Skar, H. O. (1995). Myths of origin: the Janajati Movement, local traditions, nationalism and identities in Nepal. Contributions to Nepalese Studies 22 (1): 31–42.
- ↑ Regmi, R. R. (1994). "Deforestation and Rural Society in the Nepalese Terai". Occasional Papers in Sociology and Anthropology 4: 72–89. https://core.ac.uk/download/pdf/1325105.pdf.
- ↑ Gurung, H. (2005). Social exclusion and Maoist insurgency. Paper presented at National Dialogue Conference on ILO Convention 169 on Indigenous and Tribal Peoples, Kathmandu, 19–20 January 2005.
- ↑ Krauskopff, G. (2007). "An 'indigenous minority' in a border area: Tharu ethnic associations, NGOs, and the Nepalese state". In Gellner, D. (ed.). Resistance and the State: Nepalese Experiences (Revised ed.). New York: Berghahn Books. pp. 199–243.
- ↑ Sapkota, M. (2014). "Contested Identity Politics in Nepal: Implications from Tharu Movement". IOSR Journal of Humanities and Social Science 19 (7): 16–25. https://www.academia.edu/download/34103670/D019711625.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Gorkhapatra Sansthan (2007). "Tharu community calls for inclusive democracy". The Rising Nepal. Archived from the original on 2007-09-28.
- ↑ Krauskopff, G. (1995). "The anthropology of the Tharus: an annoted bibliography". Kailash 17 (3/4): 185–213. http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/kailash/pdf/kailash_17_0304_05.pdf.
மேலும் படிக்க
[தொகு]- Ashokakirti, Bhikshu. "Searching the Origin of Selfless Self". Journal of Nepalese Studies (Kathmandu: Royal Nepal Academy) 3 (1).
- Bista, Dor Bahadur (2004). People of Nepal (9th ed.). Kathmandu: Ratna Pustak Bhandar.
- Krauskopff, G. (1989). Maîtres et possédés: Les rites et l'ordre social chez les Tharu (Népal) (in French). Paris: Editions du Centre National de la Recherche Scientifique.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Meyer, K.; Deuel, P., eds. (1998). The Tharu Barka Naach: a rural folk art version of the Mahabharata. Lalitpur: Himal Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9666742-0-0.