மிதிலை, நேபாளம்
மிதிலை (Mithila) (நேபாளி: मिथिला राज्य; மைதிலி : মিথিলা রাজ্য) மைதிலி மொழி பேசும் தெற்கு நேபாளத்தின் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்குத் தராய் சமவெளி பகுதியாகும். மிதிலையில் மைதிலை, நேபாள மொழிகள் பேசும் மதேசி மக்கள் பெரும்பான்மையான வாழ்கின்றனர். மிதிலையின் முக்கிய நகரம் ஜனக்பூர் ஆகும். மிதிலை பண்டைய விதேக நாட்டின் தலைநகராக விளங்கியது.
நேபாள மிதிலை மக்கள், இந்தியாவின் மிதிலை மக்களுடன், திருமண உறவின் மூலம் பண்பாடு மற்றும் நாகரீகத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.[1]நேபாள நாட்டின் மிதிலையையும், இந்தியாவின் மிதிலையையும் ஒன்றிணைத்து, மிதிலை பிரதேசத்தைத் தனிநாடாக அறிவிக்கக் கோரி மைதிலி மொழி பேசும் மக்கள் பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.[2]
புவியியல்[தொகு]
14,058 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நேபாள மிதிலைப் பிரதேசம் 6.65 மில்லியன் மக்கள் தொகை கொண்டது. [3] மிதிலைப் பிரதேசம் 948 கிராம வளர்ச்சி குழுக்களையும், 14 நகராட்சி மன்றங்களையும் கொண்டது. நேபாள மிதிலையின் எல்லைகள்:[4]
- வடக்கில் இமயமலையின் அடிவாரம்
- தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலம்
- மேற்கில் பிகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம்.
- கிழக்கில் பிகாரின் கிசன்கஞ்சு மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டம்
புகழ் பெற்றவர்கள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Nepal-India border relations". pp. 9-37. https://books.google.co.uk/books?id=R3tuAAAAMAAJ&q=mithila+nepal+india+cultural+ties&dq=mithila+nepal+india+cultural+ties&hl=en&sa=X&ved=0ahUKEwjzuuGD-snRAhVJJMAKHaCNDFMQ6AEILDAB. பார்த்த நாள்: 17 January 2017.
- ↑ https://books.google.co.uk/books?id=n4FQMEiZcrIC&pg=PA251&dq=free+mithila+state&hl=en&sa=X&ved=0ahUKEwiI1KfJw-XQAhXHJsAKHZ2bBSoQ6AEIGjAA
- ↑ Center for constitutional dialogue, Series 3 (2011). Mithila-Bhojpur-Koch-Madhes. Kathmandu: CCD-2011. பக். 14 இம் மூலத்தில் இருந்து 2021-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210120033819/http://www.ccd.org.np/new/publications/03_MBKM_English.pdf. பார்த்த நாள்: 2017-05-17.
- ↑ Federalism dialogues, series-3 (2011). Mithila. Kathmandu: CCD-2011. பக். iii இம் மூலத்தில் இருந்து 2021-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210120033819/http://www.ccd.org.np/new/publications/03_MBKM_English.pdf. பார்த்த நாள்: 2017-05-17.