கச மல்ல இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கச இராச்சியம்
நேபாளி: खस राज्य
கிபி 1100–1400
தலைநகரம்சிஞ்சா சமவெளி
பேசப்படும் மொழிகள்கஸ் மொழி
வேத கால சமசுகிருத மொழி
சமயம்
இந்து சமயம்
பிராமணீயம்
முன்னோர் மற்றும் இயற்கை வழிபாடு
சாமனிசம்
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• கிபி 1150 - 11??
நாகராஜ்
• 1223–87
அசோக் சல்லா
வரலாறு 
• Established
கிபி 1100
• Disestablished
1400
முந்தையது
பின்னையது
கச மல்ல இராச்சியம்
[[22 குறுநில நாடுகள்பாய்சே இராச்சியங்கள்]]
[[24 குறுநில நாடுகள்சௌபீஸ் இராச்சியங்கள்]]
தற்போதைய பகுதிகள் நேபாளம்

கச மல்ல இராச்சியம் (Khasa-Malla kingdom) (நேபாளி: खस मल्ल राज्य), என்பதை கச இராச்சியம் (Khasa Kingdom (நேபாளி: खस राज्य) என்றும் அழைப்பர். இந்த இராச்சியம் தற்கால நேபாள நாட்டில் கிபி பத்தாம் நூற்றாண்டில் மன்னர் நாகராஜன் என்பவரால் நிறுவப்பட்டது. நேபாள மல்லர் குல மன்னர்களால் (மல்லர் வம்சம் அல்ல)[1]:37 மேற்கு நேபாளத்தின் சிஞ்சா சமவெளியை தலைமையிடமாகக் கொண்டு கிபி 11 - 14ம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது.[2]

மத்திய இந்தியாவின் தாங்க இராச்சியத்தின் 954ம் ஆண்டின் கஜுராஹோ கல்வெட்டுக் குறிப்புகளில் நேபாளத்தின் கச மல்லா இராச்சியம், வங்காளத்தின் கௌடப் பேரரசு மற்றும் மேற்கு & மத்திய இந்தியாவின் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசிற்கு இணையானது எனக் கூறுகிறது. [3]

கச மல்ல இராச்சியத்தி தலைநகரான சிஞ்சா சமவெளியில் [4] 13ம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்தப்பட்ட எழுத்துக்கள்

கச மல்ல இராச்சியம் குறித்தான செய்திகள், சிஞ்சா சமவெளியின் சூம்லா மாவட்டம் மற்றும் சுர்கேத் மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சிகளில் 12 - 14ம் நூற்றாண்டு காலத்திய கஸ் மொழியில் எழுதப்பட்ட தேவநாகரி எழுத்து கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.[1]:76

கச மல்ல இராச்சியத்தை நிறுவிய மன்னர் நாகராஜனின் வாரிசுகள், தங்கள் பெயருக்குப் பின்னாள் சல்லா, மல்லா மற்றும் சப்பில்லா என்ற பட்டப் பெயர்களை தாங்கியள்ளனர். [1]:35 கச மல்ல நாட்டு மன்னர்கள் இந்து சமயப் பழக்க வழக்கங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடித்தனர்.

வரலாறு[தொகு]

மகாபாரத இதிகாசத்தில் வட இந்தியாவின் இமயமலையில் வாழ்ந்த கசர் மக்களைக் குறித்து பல இடங்களில் குறித்துள்ளது. இந்த வரலாற்று கால கச மல்ல இராச்சியத்தினருக்கும், மகாபாரதத்தில் குறித்த கசர் மக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. வரலாற்று கால நேபாள நாட்டு கச மல்லர்களைக் குறித்து, 8 முதல் 13ம் நூற்றாண்டு வரையிலான இந்திய சாத்திரங்களில் செய்திகள் உள்ளது. [3]கச மல்ல இராச்சியம், பத்தாம் நூற்றாண்டின் பிற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம், என 12 - 14ம் நூற்றாண்டில் கிடைத்த வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.

கச மல்ல இராச்சியத்தின் முக்கிய ஆட்சியாளர்கள்[தொகு]

 • நாகராஜ் (नागराज)
 • சாப் (चाप)
 • சாபில்லா (चापिल्ल)
 • கிராசிசல்லா (क्राशिचल्ल)
 • கிராதிசல்லா (क्राधिचल्ल)
 • கிராசல்லா (1189-1223)
 • ஜிதாரி மல்லா (जितारी मल्ल)
 • அசோக் சல்லா (अशोक चल्ल) (1223–87)
 • ரிபு மல்லா (1312–13) ஜிதாரி மல்லாவின் தம்பி மகன்
 • ஆதித்திய மல்லா (आदित्य मल्ल) (நாகராஜ் வழித்தோன்றல்களின் முடிவு)
 • புண்ணிய மல்லா (पुन्य मल्ल) ஆதித்திய மல்லனின் மருமகன்
 • பிரிதிவி மல்லா (पृथ्वी मल्ल) வாரிசுக்கான மகன் இல்லை
 • சூரிய மல்லா (सूर्य मल्ल) ரிபு மல்லனின் மகன்

வீழ்ச்சி[தொகு]

டோட்டியை ஆண்ட 22 பைசே இராச்சிய மன்னர்கள் காலத்தில், கஸ் மொழியில், தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட 1747ம் ஆண்டின் செப்புப் பட்டயம்

13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கச மல்ல இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. எனவே இராச்சியம் சிதறியது. கர்ணாலி - பேரி மண்டலத்தில் 22 குறுநில மன்னர்கள் கொண்ட பைசே இராஜ்ஜியக் கூட்டமைப்பும், கண்டகி மண்டலத்தில் 24 குறுநில மன்னர்கள் கொண்ட சௌபீஸ் இராச்சியக் கூட்டமைப்பும் உருவானது. சௌபீஸ் கூட்டமைப்பில் 12 கஸ் குழு மன்னர்களும், 12 மகர் குழு மன்னர்களும் இருந்தனர்.

22 குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகள்[தொகு]

24 குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச_மல்ல_இராச்சியம்&oldid=3098656" இருந்து மீள்விக்கப்பட்டது