சிங்க அரண்மனை
சிங்க அரண்மனை | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | ஐரோப்பிய கட்டிடக் கலை[1][2] |
நகரம் | காட்மாண்டு |
நாடு | நேபாளம் |
செலவு | Unknown |
கட்டுவித்தவர் | சந்திர சூம்செர் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | செங்கல் & சுண்ணாம்பு |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | குமார் நரசிங் ராணா, கிசோர் நரசிங் ராணா[1] |
சிங்க தர்பார் ( Singha Durbar) (நேபாளி: सिंहदरवार; மொழிபெயர்ப்பு: சிங்க அரண்மனை) நேபாளாத்தின் தலைநகரான காட்மாண்டு நகரத்தின் நடுவில் உள்ள அரண்மனையாகும்.[3]
வரலாறு
[தொகு]நேபாள இராச்சியத்தின் பரம்பரை பிரதம அமைச்சரான சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா (1863–1929) என்பவர் காத்மாண்டு நகரச் சதுக்கத்தில், 1908ல் சிங்க அரண்மனையை கட்டினார்.[2] பின்னர் இதனை 20 மில்லியன் ரூபாய்க்கு நேபாள இராச்சியத்திற்கு விற்று விட்டார். சிங்க அரண்மனை, அதுமுதல் நேபாள பிரதம அமைச்சர்களின் வாழிடமாக இருந்தது. [2] 1951ல் ராணா வம்ச நிர்வாகம் முடிவிற்கு வந்த போது, 1953ல் சிங்க அரண்மனை தேசிய உடைமையாக்கப்பட்டது. [2]
விபத்துகள்
[தொகு]1973 தீ விபத்து
[தொகு]9 சூலை 1973 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் சிங்க அரண்மனையின் மூன்று வளாகங்கள் தீயால் சூழ்ந்தது. முன்னிருந்த வளாகத்தை தீயிலிருந்து காத்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் மூன்று வளாகங்களில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். [4] பின்னர் சிங்க அரண்மனையை முற்றிலும் இடித்து விட்டு, பழைய அஸ்திவாரத்தின் மீது புதிய அரண்மனையைக் கட்டினர்.[4]
2015 நிலநடுக்கம்
[தொகு]2015 நிலநடுக்கத்தின் போது,[5] சிங்க அரண்மனையை பயன்படுத்த முடியாத அளவிற்கு பலத்த சேதமடைந்தது. [6]
அரசு அலுவலகங்கள்
[தொகு]தற்போது சிங்க அரண்மனையை மீண்டும் சீரமைத்து கட்டி, நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான, நேபாள பிரதிநிதிகள் சபை மற்றும் மேலவையான நேபாள தேசிய சபை செயல்படுகிறது. மேலும் நேபாள அரசின் பிரதம அமைச்சரின் அலுவலகம், 20 அமைச்சகங்களின் அலுவலகங்களும் மற்றும் நேபாள அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் செயல்படுகிறது.
2015 நேபாள நிலநடுக்கத்தின் போது சிங்க அரண்மனை கடுமையாக சேதமடைந்தது.[7]
படக்காட்சியகம்
[தொகு]-
சிங்க தர்பார்
-
சிங்க தர்பாரின் முக்கிய நுழைவு வாயில்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Mark Tushnet; Madhav Khosla (4 September 2015). Unstable Constitutionalism. Cambridge University Press. pp. 66–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-06895-7.
- ↑ 2.0 2.1 2.2 2.3 JBR, PurushottamShamsher (2007). Ranakalin Pramukh Atihasik Darbarharu [Chief Historical Palaces of the Rana Era] (in Nepali). Vidarthi Pustak Bhandar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9994611027. பார்க்கப்பட்ட நாள் 2015.
{{cite book}}
: Check date values in:|access-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "THE HISTORIC DURBARS OF KATHMANDU". 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-05.
- ↑ 4.0 4.1 http://www.thetaranights.com/singha-durbar/
- ↑ Nepal earthquake of 2015
- ↑ http://nepalitimes.com/blogs/mycity/2015/05/20/rana-palaces-after-the-earthquake/
- ↑ http://nepalitimes.com/blogs/mycity/2015/05/20/rana-palaces-after-the-earthquake/