உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்

ஆள்கூறுகள்: 26°59′N 87°20′E / 26.983°N 87.333°E / 26.983; 87.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கிழக்கு வளர்ச்சி பிராந்தியம்
பூர்வாஞ்சல் விகாஸ் சேத்திரம்
நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியாங்கள்
Location of கிழக்கு வளர்ச்சி பிராந்தியம்
நாடு நேபாளம்
பிராந்தியம்கிழக்கு வளர்ச்சி பிராந்தியம்
தலைமையிடம்தன்குட்டா, கோசி மண்டலம்
பரப்பளவு
 • மொத்தம்28,456 km2 (10,987 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்58,11,555
 pop. note
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள நேரம்)

கிழக்கு வளர்ச்சி பிராந்தியம் அல்லது பூர்வாஞ்சல் வளர்ச்சி பிராந்தியம் (Eastern Development Region) (நேபாள மொழி: पुर्वाञ्चल विकास क्षेत्र, Purwānchal Bikās Kshetra) நேபாளத்தின் ஐந்து வளர்ச்சிப் பிராந்தியங்களில் ஒன்றான இப்பிராந்தியம் நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பிராந்தியம் நேபாளத்தின் தென்கிழக்கின் தராய் பகுதியிலிருந்து, வடக்கின் இமயமலை பகுதி வரை, தெற்கு – வடக்காக அமைந்துள்ளது. இப்பிராந்தியத்தில் வடக்குப் பகுதி திபெத் தன்னாட்சி பகுதியை எல்லையாகக் கொண்டது. [1] இப்பிராந்தியத்தின் தெற்கில் தராய் சமவெளியும், நடுவில் குன்றுப் பகுதிகளும், வடக்கில் மலைப் பகுதிகளும் உள்ளது. கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தின் நிர்வாகத் தலைமையிடம் தன்குட்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தன்குட்டா நகரத்தில் அமைந்துள்ளது. [2]28,456 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது கிழக்கு வளர்ச்சி பிராந்தியம்.

அமைவிடம்

[தொகு]

கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலமும், தென்கிழக்கில் மேற்கு வங்காளம், கிழக்கில் இந்தியாவின் சிக்கிம் மாநிலமும், மேற்கில் மத்திய வளர்ச்சி பிராந்தியமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மண்டலங்கள்

[தொகு]

கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தை நிர்வாக வசதிக்காக மேச்சி மண்டலம், கோசி மண்டலம் மற்றும் சாகர்மாதா மண்டலம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேச்சி மண்டலத்தின் மாவட்டங்கள்

மேச்சி மண்டலத்தில், ஜாப்பா மாவட்டம், இலாம் மாவட்டம், பாஞ்சதர் மாவட்டம் மற்றும் தாப்லேஜுங் மாவட்டம் என நான்கு மாவட்டங்கள் உள்ளது.

கோசி மண்டலத்தின் மாவட்டங்கள்

கோசி மண்டலத்தில் போஜ்பூர் மாவட்டம், தன்குட்டா மாவட்டம், மொரங் மாவட்டம், சங்குவாசபா மாவட்டம், சுன்சரி மாவட்டம் மற்றும் தேஹ்ரதும் மாவட்டம் என ஆறு மாவட்டங்கள் அமைந்துள்ளது.

சகர்மாதா மண்டலத்தின் மாவட்டங்கள்

சாகர்மாதா மண்டலத்தில் தராய் சமவெளிப் பகுதிகளில் ஒகல்டுங்கா மாவட்டம், சப்தரி மாவட்டம், சிராஹா மாவட்டம், தராய் உள் பகுதியில் உதயபூர் மாவட்டமும், குன்றுப் பகுதிகளில் கோடாங் மாவட்டமும் மற்றும் இமயமலை பகுதியில் சோலுகும்பு மாவட்டம் அமைந்துள்ளது.

சிறப்புகள்

[தொகு]

கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் (8,848 மீட்டர் உயரம்), கஞ்சன்ஜங்கா மலை (8,598 மீட்டர் உயரம்) மற்றும் கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா, சாகர்மாதா தேசியப் பூங்கா, மகாலு பரூன் தேசியப் பூங்கா, கோசி தாப்பு காட்டுயிர் காப்பகம் ஆகியவைகள் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிழக்கு பிராந்தியத்தின் மக்கள் தொகை 58,11,555 ஆக உள்ளது. இப்பிராந்தியத்தில் நேபாள மொழி, போஜ்புரி மொழி, லிம்பு மொழி, இராஜ்பன்சி, நேவாரி மொழி, ராய் மொழி, தமாங் மொழி, மஹர் மொழி, மைதிலி மொழி மற்றும் உருது மொழி பேசும் லிம்பு இன மக்கள் , செர்ப்பா, கிராதர்கள் இராய் செட்டிரி மற்றும் நேவார் மக்கள், இந்துக்கள் இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மற்றும் மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

[தொகு]

புவியியல்

[தொகு]

28,456 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது நேபாளத்தின் கிழக்கு வளர்ச்சி பிராந்தியம். நேபாளத்தின் பிற வளர்ச்சி பிராந்தியங்கள் போன்று கிழக்கு வளர்ச்சி பிராந்தியமும் மூன்று விதமான புவியியல் பகுதிகளைக் கொண்டது. வடக்கில் இமயமலை பகுதிகளும், நடுவில் மலைப்பாங்கான பகுதிகளும், தெற்கில் தராய் சமவெளி பகுதிகளையும் கொண்டுள்ளது. கிழக்கு வளர்ச்சி பிராந்தியம் கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் முதல் 8,848 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. கிழக்கிலிருந்து மேற்காக தராய் சமவெளிகள் அமைந்துள்ளது.

தட்ப வெப்பம்

[தொகு]

கிழக்கு வளர்ச்சி பிராந்தியம் கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் முதல் 8,848 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளதால், இதன் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன்#ஆல்ப்ஸ் மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஏழு நிலைகளில் காணப்படுகிறது. [3] [4]

நகரங்கள்

[தொகு]

நேபாளத்தின் கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தின் முக்கிய நகரங்களாக விராட்நகர், தரண், தன்குட்டா, இதாரி, இராஜ்பிராஜ், பீர்தமோத், தமக், கைகாட், லகான், இலாம், மற்றும் பத்திரப்பூர் விளங்குகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Background : Eastern REgion at a Glance". Nepalarmy.mil.np. Archived from the original on 2015-06-14. பார்க்கப்பட்ட நாள் 2015-06-04.
  2. "An overview of the Eastern Region of Nepal". Archived from the original on 2017-03-18. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.
  3. |title=Physical Environment of Eastern Development Region of Nepal
  4. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)
பிழை காட்டு: <ref> tag defined in <references> has no name attribute.

வெளி இணைப்புகள்

[தொகு]