இலாம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாள நாட்டின் மாநில எண் – 1-இல் மேச்சி மண்டலத்தில் அமைந்த இலாம் மாவட்டம்

இலாம் மாவட்டம் (Ilam district) (நேபாளி: इलाम जिल्लाAbout this soundListen ) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில், மாநிலம் எண் 1-இன் மேச்சி மண்டலத்தில் இமயமலையின் 3,636 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டமாகும். இது நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் இலாம் நகரம் ஆகும். இலாம் நகரம் காத்மாண்டிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இலாம் மாவட்டத்தின் பரப்பளவு 1703 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள் தொகை 2,90,254 ஆக உள்ளது.[1]

வேளாண்மை[தொகு]

இலாம் தேயிலைத் தோட்டம்

இம்மாவட்டத்தில் பயிரிடப்படும் இலாம் தேயிலை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. ஏலக்காய், பால் பொருட்கள், இஞ்சி மற்றும் உருளைக் கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டருக்கும் கீழ் 15.5%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள் 33.5%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 40.1%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 10.6%
Montane ecology#Subalpine zone 3,000 - 4,000 மீட்டர்கள் 0.3%

கிராம வளர்ச்சிக் குழுக்கள் மற்றும் நகராட்சிகள்[தொகு]

இலாம் மாவட்ட கிராம வளர்ச்சிக் குழுக்கள்

இலாம் மாவட்டத்தில் ஐந்து நகராட்சிகளும், 45 கிராம வளர்ச்சிக் குழுக்களும் செயல்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 26°54′N 87°56′E / 26.900°N 87.933°E / 26.900; 87.933

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாம்_மாவட்டம்&oldid=2610030" இருந்து மீள்விக்கப்பட்டது