ராமேச்சாப் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாளத்தில் ராமேச்சாப் மாவட்டத்தின் அமைவிடம்


ராமேச்சாப் மாவட்டம் (Ramechhap District) (நேபாளி: रामेछाप जिल्लाAbout this soundகேட்க ), தெற்காசியாவில் நேபாள நாட்டின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 3-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மந்தலி நகரம் ஆகும்.

ஜனக்பூர் மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் பரப்பளவு 1,546 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ராமேச்சாப் மாவட்டத்தின் மக்கள் தொகை 2,02,646 ஆகும். [1] மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 137.4 வீதம் உள்ளனர். இம்மாவட்டத்தின் குசுந்தா இன மக்கள் தொகை அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது.[2] இம்மாவட்டத்தில் நேபாள மொழி, சுனுவார் மொழி, தாமாங் மொழி, நேவாரி மொழி மற்றும் ஹாயு மொழிகள் பேசப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரத்தில் இமயமலை வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [3]

கிராம வளர்ச்சி மன்றங்கள்[தொகு]

ராமேச்சாப் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

ராமேச்சாப் மாவட்டம் நாற்பத்தி ஆறு கிராம வளர்ச்சி மன்றங்களும், மந்தலி மற்றும் ராமேச்சாப் என இரண்டு நகராட்சிகளுடன் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


ஆள்கூறுகள்: 27°20′0″N 86°5′0″E / 27.33333°N 86.08333°E / 27.33333; 86.08333

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமேச்சாப்_மாவட்டம்&oldid=2167534" இருந்து மீள்விக்கப்பட்டது