காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாளத்தில் காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் அமைவிடம்

காப்ரேபலாஞ்சோக் மாவட்டம் (Kavrepalanchok District) (நேபாளி: काभ्रेपलाञ्चोक जिल्लाஇந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க) மத்திய நேபாளத்தின், மாநில எண் 3-இல், பாக்மதி மண்டலத்தில் அமைந்த, நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் துலிகேல் நகரம் ஆகும்.

1,396 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் மக்கள் தொகை 3,81,937 ஆகும். மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மை மற்றும் சுற்றுலாவைச் சார்ந்து உள்ளது.


நிலவியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[1] உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டர்களுக்கும் கீழ் (1,000 அடிகள்) 0.1%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடிகள்
23.6%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடிகள்
65.3%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடிகள்
9.6%

மருத்துவம்[தொகு]

கிராமபுறங்களே கொண்ட இம்மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களால் நடத்தப்படும் ஆரம்ப சுகாதர மையங்கள் உள்ளது. இம்மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவ மனைகள் இல்லாத காரணத்தினால், பொது மக்கள் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 27°37′N 85°33′E / 27.617°N 85.550°E / 27.617; 85.550