கோடாங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாளத்தில் கோடாங் மாவட்டத்தின் அமைவிடம்

கோடாங் மாவட்டம் (Khotang District) (நேபாளி: खोटाङ जिल्लाAbout this soundகேட்க ), நேபாள நாட்டின், கிழக்கு வளர்ச்சிப் பிராந்தியத்தில், மாநில எண் 1 –இல் அமைந்த பதினான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களிலும் ஒன்றாகும். கோடாங் மாவட்டத் தலைமையிடமான டிக்டெல் நகரம் ஒரு நகராட்சியும் ஆகும்.

கோடாங் மாவட்டத்தின் பரப்பளவு 1,591 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,6,312 ஆகும். [1] கோடாங் மாவட்டம், கிராதர்கள் எனப்படும் இராய் பழங்குடி இன மக்களின் பூர்வீகமானது ஆகும். பிற மலைவாழ் பழங்குடி மக்களும் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 4,000 மீட்டர் உயரம் வரை பரந்துள்ள கோடாங் மாவட்டத்தின் தட்ப வெப்பநிலை ஐந்து வகையாக உள்ளது. அவைகள் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலம், மிதமான காலநிலை மற்றும் மான்ட்டேன் காலநிலை ஆகும்.[2]

நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்[தொகு]

கோடாங் மாவட்டத்தின் நகராட்சிகளையும், கிராம வளர்ச்சி மன்றங்களையும் காட்டும் வரைபடம்

கோடாங் மாவட்டம் எழுபத்தி மூன்று கிராம வளர்ச்சி மன்றங்களும், ஒரு நகராட்சி மன்றத்தையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 27°12′N 86°47′E / 27.200°N 86.783°E / 27.200; 86.783

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடாங்_மாவட்டம்&oldid=2167500" இருந்து மீள்விக்கப்பட்டது