முகு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாளத்தில் முகு மாவட்டத்தின் அமைவிடம்

முகு மாவட்டம் (Mugu District) (நேபாளி: मुगु जिल्लाAbout this soundகேட்க ), தெற்காசியாவில் நேபாள நாட்டின், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 6–இல் அமைந்த எழுபத்தி ஐந்து நேபாள மாவட்டங்களில் ஒன்றாகும். முகு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கம்கடி நகரம் ஆகும்.

கர்ணாலி மண்டலத்தில் அமைந்த முகு மாவட்டத்தின் பரப்பளவு 3,535 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முகு மாவட்ட மக்கள் தொகை 55,286 ஆகும்.[1]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

முகு மாவட்டத்தின் புவியியல் மிகவும் கடினமானது. நேபாளத்தின் மிகப் பெரிய ஏரியான மகேந்திர ஏரி எனப்படும் ராரா ஏரி முகு மாவட்டத்தில் உள்ளது. நேபாளத்தின் பெரிய மாவட்டங்களில் முகு மாவட்டமும் ஒன்றாகும்.

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து காலநிலைகளில் காணப்படுகிறது. [2]

சுற்றுலா[தொகு]

நேபாளத் தலைநகரான காட்மாண்டு நகரத்திலிருந்து தொலைதூரத்தில், போக்குவரத்து வசதியின்றி உள்ள முகு மாவட்டம் இயற்கை ஆதாரங்களால் நிரம்பி வழிகிறது. நேபாளத்தின் மிகப்பெரிய மகேந்திரா ஏரி எனப்படும் 10.8 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ராரா ஏரியைக் காண சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கிறது. மேலும் ராரா தேசியப் பூங்கா இந்த ஏரியை காக்கிறது.

கிராம வளர்ச்சி மன்றங்கள்[தொகு]

முகு மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

முகு மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்திற்காக இருபத்தி ஆறு கிராம வளர்ச்சி மன்றங்கள் செயல்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 29°33′N 82°10′E / 29.550°N 82.167°E / 29.550; 82.167

Rara Lake Trek
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகு_மாவட்டம்&oldid=2170507" இருந்து மீள்விக்கப்பட்டது