நேபாள-பிரித்தானிய உடன்படிக்கை, 1923
Appearance
கையெழுத்திட்டது | 21 டிசம்பர் 1923 |
---|---|
இடம் | சிங்க அரண்மனை, காட்மாண்டு, நேபாளம் |
நடைமுறைக்கு வந்தது | 21 டிசம்பர் 1923 |
நிலை | பிரித்தானியர்களால் நேபாளம் சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடு என்ற தகுதி வழங்கப்பட்டது. |
முடிவுக்காலம் | 31 சூலை 1950[1] |
கையெழுத்திட்டோர் | Nepal பிரித்தானியா |
மொழிகள் | நேபாளி, ஆங்கிலம் |
நேபாள-பிரித்தானிய உடன்படிக்கை (Nepal–Britain Treaty), 21 டிசம்பர் 1923 அன்று நேபாளத்தின் சிங்க அரண்மனையில் மேற்கொள்ளப்பட்டது.[2] இந்த உடன்படிக்கை மூலம் நேபாளம் சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடு என்ற தகுதியை பிரித்தானியர்களால் வழங்கப்பட்டது.[3] பின்னர் இந்திய விடுதலைக்குக்ப் பின்னர், 31 சூலை 1950 அன்று மேற்கொள்ளப்பட்ட 1950 இந்தியா-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கையால் 1923-ஆம் ஆண்டு ஒப்பந்தம் நீக்கப்பட்டது.
உடன்படிக்கையின் பின்விளைவுகள்
[தொகு]இந்த உடன்படிக்கையால் நேபாளம் சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடு என்ற தகுதி பெற்றது. உடன்படிக்கையை உலக நாடுகள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டது.[4] இதனால் சர்வதேச நிலைகளில் நேபாளத்தின் கருத்து மதிக்கப்பட்டது. மேலும் நேபாளத்தை மறைமுகமாக ஆண்ட ராணா வம்சத்தினர் கை ஓங்கியது.[5][6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1950 இந்தியா-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கையால், 1923 ஒப்பந்தம் நீக்கப்பட்டது.
- ↑ Landon, P. (1976). Nepal. Kathmandu: Ratna Pustak Bhandar. p. 151.
- ↑ Hussain, Assad (1970). British India's relation with the Kingdom of Nepal. London: George Allen and Unwin Ltd. p. 208.
- ↑ Majumdar, K. Political Relations between India and Nepal. p. 234.
- ↑ Hussain, Assad (1970). British India's relation with the Kingdom of Nepal. London: George Allen and Unwin Ltd.
- ↑ Acharya, Baburam (2022 B.S.). Nepal ko Sanxipta Britanta.
{{cite book}}
: Check date values in:|year=
(help)