நேபாள்கஞ்ச்
நேபாள்கஞ்ச்
नेपालगन्ज | |
---|---|
துணை மாநகராட்சி | |
அடைபெயர்(கள்): NPJ | |
ஆள்கூறுகள்: 28°03′N 81°37′E / 28.050°N 81.617°E | |
நாடு | நேபாளம் |
பிராந்தியம் | மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம் |
மண்டலம் | பேரி மண்டலம் |
மாவட்டம் | பாங்கே |
துணை மாநாகராட்சி | நேபாள்கஞ்ச் |
ஏற்றம் | 150 m (490 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,28,450 |
• அடர்த்தி | 1,592.13/km2 (4,123.6/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்) |
இணையதளம் | www.nepalgunjmun.gov.np |
நேபாள்கஞ்ச் (Nepalgunj) (நேபாளி: नेपालगन्ज, நேபாள நாட்டின் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின், பேரி மண்டலத்தில் அமைந்த பாங்கே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், துணை மாநகராட்சியும் ஆகும்.
தராய் சமவெளியில் அமைந்த நேபாள்கஞ்ச் நகரத்தின் தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பகராயிச் மாவட்டம் எல்லையாக அமைந்துள்ளது.
தொழில் வளர்ச்சி அடைந்த நேபாள்கஞ்ச் நகரத்தில் மேற்கு ரப்தி ஆற்றின் நீரால் வளமையாக உள்ளது. நேபாள்கஞ்சின் தென்மேற்கில் 85 கிலோ மீட்டர் தொலைவில் கோராயி நகரமும், 16 கிலோ மீட்டர் தொலைவில் கோஹால்பூர் நகரமும், 35 கிலோ மீட்டர் தொலைவில் குலாரியா நகரமும் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாள்கஞ்ச் நகரத்தின் மக்கள் தொகை 1,28,450 ஆக உள்ளது.[1] நேபாள்கஞ்ச் நகரத்தில் நேபாள மொழி, பஹாரி மொழி, அவதி மொழிகள் பேசப்படுகிறது. இந்நகர மக்கள் இந்து சமயம், பௌத்தம், இசுலாம், சீக்கியம் மற்றும் கிறித்தவ சமயத்தை பின்பற்றுகின்றனர். இந்நகரத்தில் பாகேஸ்வரி கோயில் அமைந்துள்ளது.
தட்ப வெப்பம்
[தொகு]நேபாள்கஞ்ச் நகரத்தின் தட்ப வெப்பம், கோடைகாலத்தில் அதிக பட்ச வெப்பநிலை 40° செல்சியசிற்கும் மேலாகவும், குளிர்காலத்தில் அதிக பட்ச வெப்பம் 4°செல்சியசுமாக உள்ளது.