ஒன்றுபட்ட நேபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மாண்டு அரண்மனையை காக்கும் கூர்க்கா படைவீரர்கள்

ஒருகிணைந்த நேபாளம் (unification of Nepal) கோர்க்கா இராச்சிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சிக் காலத்தில் சிதிறியிருந்த நேபாளத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து 1769-ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த நேபாள இராச்சியத்தை நிறுவினார். காட்மாண்டுப் போர், கீர்த்திப்பூர் போர் மற்றும் பக்தபூர் போர்கள் மூலம், கோர்க்கா இராச்சிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா, காத்மாண்டு சமவெளிப் பகுதிகளில் இருந்த காட்மாண்டு, லலித்பூர் மற்றும் பக்தபூர் போன்ற 3 நகர இராச்சியங்களை வென்று கோர்க்கா இராச்சியத்துடன் இணைத்தார். பின்னர் மலைப்பகுதியில் இருந்த தலைநகரான கோர்க்காவை, மன்னர் பிரிதிவி நாராயாணன் ஷா, 1769-ஆம் ஆண்டில் காட்மாண்டு நகரத்திற்கு மாற்றினார்.[1][2]

மேற்கு நேபாளத்தின் 24 இராச்சியங்களை வென்ற மன்னர் பிரிதிவி நாராயணனின் ஷா வமத்தினர் கிழக்கே சத்லஜ் ஆறு முதல் மேற்கே சிக்கிம்-ஜல்பைகுரி வரை இமயமலைப் பகுதிகளில் நேபாள இராச்சியத்தை போர்கள் மூலம் விரிவுப்படுத்தினர்.[1][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Pradhan, Kumar, 1937- (1991). The Gorkha conquests : the process and consequences of the unification of Nepal, with particular reference to eastern Nepal. Calcutta: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-562723-7. இணையக் கணினி நூலக மையம்:24874742. 
  2. Unification of Nepal – by King Prithivi Narayan Shah
  3. Whelpton, John. (2005). A history of Nepal. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-80026-9. இணையக் கணினி நூலக மையம்:55502658. 

மேலும் படிக்க[தொகு]

  • Fr. Giuseppe. (1799). An account of the kingdom of Nepal. Asiatic Researches. Vol 2. (1799). pp. 307–322.
  • Reed, David. (2002). The Rough Guide to Nepal. DK Publishing, Inc.
  • Wright, Daniel, History of Nepal. New Delhi-Madras, Asian Educational Services, 1990
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்றுபட்ட_நேபாளம்&oldid=3099616" இருந்து மீள்விக்கப்பட்டது