நேபாள குடியரசுத் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடியரசுத் தலைவர்  நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு
Emblem of Nepal.svg
நேபாள அரசின் சின்னம்
தற்போது
வித்யா தேவி பண்டாரி

29 அக்டோபர் 2015 முதல்
அதிகாரப்பூர்வ பட்டம் மேன்மை தாங்கிய
வாழுமிடம் சீதள் நிவாஸ்
நியமிப்பவர் மறைமுகத் தேர்தல்
பதவிக் காலம் ஐந்தாண்டுகள்
முதல் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்
உருவாக்கப்பட்ட ஆண்டு 28 மே 2008 (2008-05-28) (10 ஆண்டுகளுக்கு முன்னர்)
துணை வார்ப்புரு:Post துணைக் குடியரசுத் தலைவர்
ஊதியம் நேபாள ரூபாய் 1,09,410 (மாதந்தோறும்)[1]
இணைய தளம் www.presidentofnepal.gov.np

நேபாள குடியரசுத் தலைவர், (President of the Federal Democratic Republic of Nepal) (நேபாளி: राष्ट्रपति), நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு மற்றும் முப்படைகளின் தலைவர் ஆவார். நேபாளத்தில் மன்னராட்சி ஒழித்து, நேபாளத்தை ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசாக அறிவித்த நாளில் குடியரசுத் தலைவர் பதவி மே 2008ல் உருவாக்கப்பட்டது. நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் ஆவார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி அக்டோபர், 2015ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இரண்டாம் முறையாக மார்ச், 2018ல் மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்[தொகு]

நேபாள நாடாளுமன்றத்தின், பிரதிநிதிகள் சபை, தேசிய சபை உறுப்பினர்கள் மற்றும் ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால், நேபாள குடியரசுத் தலைவர் தேர்ந்தேடுக்கப்படுகிறார்.

குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் குடியரசுத் தலைவர் பதவி வகிக்க இயலாது.

அதிகாரங்கள்[தொகு]

இந்தியக் குடியரசுத் தலைவர் போன்றே, நேபாளக் குடியரசுத் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் சடங்கு சம்பிரதாயம் போன்றதே. பிரதம அமைச்சரின் ஆலோசனையின் படியே நேபாள குடியரசுத் தலவர் செயல்படுகிறார்.

குடியரசுத் தலைவர் பதவியின் வரலாறு[தொகு]

நேபாள இடைக்கால அரசியலமைப்பு சட்டத்தின் படி நேபாளத்தில் சனவரி, 2007 அன்று மன்னராட்சி முறை ஒழிக்க தீர்மானிக்கப்பட்டது. நேபாளத்தின் தற்காலிக குடியரசுத் தலைவராக முன்னாள் பிரதம அமைச்சர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 28 மே 2008ல் கூடிய நேபாள நாடாளுமன்றம், ராம் பரன் யாதவ்வை, நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் நேபாளத்தில் 247 ஆண்டு கால மன்னராட்சி முறை அதிகாரப்பூர்வமாக முடிவிற்கு வந்தது.

நேபாளக் குடியரசுத் தலைவர்கள் (2008 முதல் - தற்போது வரை)[தொகு]

எண் பெயர்
(பிறப்பு–இறப்பு)
படம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் பதவியேற்ற நாள் விலகிய நாள் துணை குடியரசுத் தலைவர் வாக்குகள்
1 ராம் பரன் யாதவ்
(1948–)
Dr. Ram Baran Yadav.jpg நேபாளக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2008 23 சூலை 2008 29 அக்டோபர் 2015 பரமானந்த ஜா
308 / 601

(2nd round)
2 வித்யா தேவி பண்டாரி
(1961–)
Vidhya Bhandari2.JPG நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2015 29 அக்டோபர் 2015 பதவியில் நந்த கிசோர் புன்
327 / 601
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2018

நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2018[தொகு]

நேபாள குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் 13 மார்ச் 2018ல் நடைபெற்றது. தேர்தலில் தற்போதைய குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி மற்றும் குமாரி லெட்சுமி ராய் போட்டியிட்டனர்.[2][3] தேர்தல் முடிவில் வித்யா தேவி பண்டாரி பெரும்பாலான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]

குடியரசுத் தலைவர் தேர்தல்

வேட்பாளர் அரசியல் கட்சிகள் வாக்குகள்
வித்யா தேவி பண்டாரி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்
குமாரி லெட்சுமி ராய் நேபாளி காங்கிரஸ்
செல்லாத வாக்குகள் 37

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக[தொகு]